Advertisement

உங்கள் அழகையும் அதிகரிக்க செய்யும் கடுகு விதை!

By: Monisha Sun, 28 June 2020 6:02:06 PM

உங்கள் அழகையும் அதிகரிக்க செய்யும் கடுகு விதை!

கடுகு விதைகளில் பல தோல் பராமரிப்பு நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பதைத் தவிர, இது உங்கள் அழகையும் அதிகரிக்க செய்யும். இது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கடுகு விதைகள் சருமத்திற்கு இயற்கையான எக்ஸ்போலியேட்டர்களாக செயல்படும் என்று நம்பப்படுகிறது. எனவே நீங்கள் அழகுசாதனப் பொருட்களுக்கு குட்பை சொல்லிவிட்டு விடைபெறலாம். கடுகு விதைகள் சிலவற்றை எடுத்து கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து முகத்திற்கு சரியான ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.

beauty,mustard seed,natural,aloe,skin care ,அழகு,கடுகு விதை,இயற்கை,கற்றாழை,தோல் பராமரிப்பு

இள வயதிலே வயதான தோற்றத்துடன் போராடி வருபவர்களும், முகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சுருக்கங்கள் இருப்பவர்களும், தோல் பராமரிப்புக்கான இந்த விதைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவற்றில் உள்ள வைட்டமின் சி இந்த பிரச்சினையை கவனித்துக்கொள்ளும்.

மேலும் இந்த விதைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் சில பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் கடுகினை ஒரு பேஸ்டாக செய்து அதில் சிறிது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சருமத்தில் பூசி வர சருமத்தில் ஏற்படும் இன்ஃபெக்ஷனில் இருந்து விடுபடலாம்.

beauty,mustard seed,natural,aloe,skin care ,அழகு,கடுகு விதை,இயற்கை,கற்றாழை,தோல் பராமரிப்பு

கடுகு பேஸ் பேக் எப்படி தயார் செய்வது?
ஒரு சில கடுகு விதைகள், இரண்டு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் இரண்டு தேக்கரண்டி தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில், நீங்கள் விதைகளை அரைத்து, பின்னர் அவற்றை மாவுடன் கலக்க வேண்டும். அடுத்து, கலவையில் தண்ணீர், கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் சேர்த்து மென்மையான மற்றும் சீரான பேஸ்டாக்கி கொள்ள வேண்டும்.

இதை முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் இருக்கட்டும். நீங்கள் ஈரமான துணியால் முகத்தை மெதுவாக தேய்க்கலாம், பின்னர் அதை சாதாரண தண்ணீரில் சுத்தம் செய்யலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது இதைச் செய்யுங்கள். கண்டிப்பாக நல்ல வித்தியாசம் தெரியும்.

Tags :
|
|