Advertisement

அழகான முகத்தை பொலிவாக்க உதவும் மைசூர் துவரம் பருப்பு

By: Nagaraj Mon, 08 Aug 2022 10:21:44 PM

அழகான முகத்தை பொலிவாக்க உதவும் மைசூர் துவரம் பருப்பு

சென்னை: பொதுவாக துவரம் பருப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆனால் மைசூர் துவரம் பருப்பு ஆரஞ்சு வண்ணத்தில் வித்தியாசமாக இருக்கும். இந்த ஆரஞ்சு வண்ண துவரம் பருப்பு சமையலுக்கு பயன்படுதோ, இல்லையோ முகத்தை பட்டு போல மாற்ற கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது. ரொம்பவும் சூப்பரான இந்த முக அழகு குறிப்பை எப்படி மேற்கொள்வது? என்பதை தெரிந்து கொள்வோம்.

ஏராளமான சத்துக்களை கொண்டுள்ள இந்த மைசூர் துவரம் பருப்பு, சருமத்தில் இருக்கும் நிற இழப்பை சரி செய்து, சுருக்கங்களை நீக்கி, பொலிவான ஒரு தேகத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம், முகப்பருக்கள் போன்றவற்றையும் விரட்டி அடிக்கக்கூடிய அத்தனை மூலப் பொருட்களையும் தன்னகத்தே ஒளித்துக் கொண்டுள்ளது.


இதில் இருக்கும் ஏராளமான வைட்டமின்கள், மினரல்கள் போன்றவை சருமத்திற்கு ஊட்டச்சத்தை கொடுத்து இழந்த பொலிவை மீட்டு எடுக்க ரொம்பவும் விரைவாக செயல்படுகிறது. சருமத்தில் இருக்கும் சமச்சீரற்ற தன்மை அதாவது மேடும், பள்ளமுமாக கரடு, முரடாக உங்கள் முகம் இருந்தால் முதலில் மைசூர் பருப்பை நன்கு வெயிலில் காய வைத்து உலர்த்தி பவுடர் ஆக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

mysore dal,scrubbing,massaging,glowing,once a week ,மைசூர் பருப்பு, ஸ்க்ரப்பிங், மசாஜ், பளிச்சென்று இருக்கும், வாரம் ஒருமுறை

இந்த மைசூர் பருப்பு பவுடரை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதனுடன் சுத்தமான தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதை முகம் முழுவதும் தடவி காயும் வரை உலர விட்டு விடுங்கள். பிறகு நன்கு காய்ந்த பின்பு குளிர்ந்த நீரினால் துடைத்து எடுக்க வேண்டும்.


இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வாருங்கள், முகம் கொஞ்சம் கொஞ்சமாக மேடும் பள்ளமுமாக இல்லாமல் சரிசமமாக நைசாக மாற துவங்கும். தொட்டுப் பார்த்தால் பட்டு போல பளபளன்னு மின்னுவதற்கு இந்த மைசூர் பருப்பை முழுதாக இருக்கும் பொழுது தேவையான அளவிற்கு சுத்தமான பால் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.


மறுநாள் காலையில் நன்கு பாலில் ஊறிய இந்த மைசூர் பருப்புடன், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். ஸ்க்ரப்பர் போல செயல்படக்கூடிய இந்த ஒரு குறிப்பை ஸ்க்ரப்பிங் மற்றும் மசாஜ் போன்றவற்றை செய்து உலர விட்டு விடுங்கள்.


அதன் பிறகு குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் இழந்த பொலிவையும், புத்துணர்வையும் மீண்டும் பெறும். இதனால் முகம் பார்ப்பதற்கு கண்ணாடி போல பளபளன்னு பளிச்சென இருக்கும். இதை வாரம் ஒரு முறை செய்தால் இன்னும் நல்ல பலன்களை காணலாம்.

Tags :