Advertisement

முகத்திற்கு நல்ல பொலிவைத் தரும் சாதாரண வீட்டு பொருட்கள்!

By: Monisha Sat, 27 June 2020 4:49:56 PM

முகத்திற்கு நல்ல பொலிவைத் தரும் சாதாரண வீட்டு பொருட்கள்!

இயற்கை பேஸ் கிளினர்கள் ஆடம்பரமானதாக கருதப்படுகிறது. ஆனால் உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள சாதாரண பொருட்களைக் கொண்டே ஒரு பேஸ் வாஷை செய்தால் அது எப்படி இருக்கும்? இயற்கையாக கிடைக்கக்கூடிய தானியங்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தினால் அவை உங்கள் முகத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.

ஓட்ஸ் தூள் ஒரு சிறந்த இயற்கையான ஸ்க்ரப்பர். சருமத்தை ஒரே நேரத்தில் மென்மையாக்கி ஈரப்பதமாக்கும். பாதாமில் உள்ள எக்ஸ்போலியன்ட் (exfoliant) பண்புகள் உங்கள் சரும பராமரிப்புக்கு சிறந்தது. மஞ்சள் அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினியாக செயல்பட்டு உங்கள் சருமத்துக்கு இயற்கையான பொலிவை வழங்கும்.

கடலை மாவில் உள்ள சிறு துகள்கள் சருமத்தில் உள்ள சிறு துவாரங்களில் இருக்கும் கூடுதலான எண்ணெய் பிசுக்கை அகற்றும். லாவெண்டர் அனைத்து விதமாக சருமத்துக்கும் ஏற்றது. இது முகப்பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள சிறு புள்ளிகளை அகற்றும்.

natural beauty,oatmeal,besan flour,turmeric,almonds ,இயற்கை அழகு,ஓட்ஸ்,கடலை மாவு,மஞ்சள்,பாதாம்

தேவையான பொருட்கள்
1/4 கப் ஓட்ஸ்
1/2 கப் கடலை மாவு
2 தேக்கரண்டி பாதாம் பொடி
10 சொட்டு லாவெண்டர்
1 தேக்கரண்டி மஞ்சள் பொடி

தயாரிப்பு முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான பொருட்கள் அனைத்தையும், எண்ணெய் உட்பட நன்றாக கலக்கவும். இந்த கலவையை காற்று புக முடியாத கண்ணாடி ஜாடியில் சேமித்து வைக்கவும். பேஸ் வாஷுக்கு ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து பயன்படுத்தவும்.

Tags :