Advertisement

குளிர்கால வறண்ட சரும பிரச்னையை சரி செய்யும் இயற்கை மாயிஸ்ரைச்சர்!

By: Monisha Wed, 18 Nov 2020 12:41:23 PM

குளிர்கால வறண்ட சரும பிரச்னையை சரி செய்யும் இயற்கை மாயிஸ்ரைச்சர்!

குளிர்காலங்களில் அனைவரின் சருமமும் வறண்ட சருமமாகவே காணப்படும். சில வேளைகளில் சருமம் வறண்டு, மீன் செதில் போன்ற வடிவங்கள் ஏற்படுவதுண்டு. இப்பிரச்சினைக்கு தீர்வு காண முதலில் செம்பருத்தி மாயிஸ்ரைச்சர் தயாரிக்கலாம்.

தேவையானவை
செம்பருத்தி டீ – 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 கப்
பாதாம் எண்ணெய் – 2 ஸ்பூன்
வைட்டமின் ஈ மாத்திரை – 1
பன்னீர் – 5 சொட்டு
தேன் – 1 ஸ்பூன்

winter,dry skin,natural,moisturizer,red poppy ,குளிர்காலம்,வறண்ட சருமம்,இயற்கை,மாயிஸ்ரைச்சர்,செம்பருத்தி

செய்முறை
முதலில் செம்பருத்தி டீயை தூளாக்கி வைத்து கொள்ளவும். பின் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் தூளாக்கி வைத்திருக்கும் செம்பருத்தி டீயை சேர்த்து, நன்றாக கலக்கவும். கலக்கிய பின் இதனுடன் தேன், பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரை இவற்றை சேர்த்து ஒன்றாக கலக்கி, பின் அந்த கலவையை ஒரு சீஸ் துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு வடிகட்டிய எண்ணெயை ஆற வைத்து, நன்றாக ஆறியவுடன், அதை மிக்சி ஜாரில் ஊற்றி அடித்துக் கொள்ளவும். இதனை ஒரு காற்று புகாத ஒரு ஜாடியில் ஊற்றி வைத்து பயன்படுத்தவும். இந்த மாயிஸ்ரைச்சரை தினமும் பயன்படுத்துங்கள்.

இந்த மாயிஸ்ரைச்சரை பயன்படுத்துவதால் சருமம் நாள் முழுவதும் மென்மையாகவும், நீர்சத்தோடும் இருக்கும். இந்த மாயிஸ்ரைச்சரை ஒரு நாளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்துவது போதுமானது. இப்போது சருமம் மென்மையாகி இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

Tags :
|