Advertisement

பொலிவிழந்து இருக்கும் முகம் பொலிவு பெற இயற்கை வழிமுறைகள்

By: Nagaraj Sun, 31 July 2022 2:46:39 PM

பொலிவிழந்து இருக்கும் முகம் பொலிவு பெற இயற்கை வழிமுறைகள்

சென்னை: சருமப் பாதுகாப்பில் பலரும் கூடுதல் கவனம் செலுத்தும் காலம் இது. கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள், சருமத்திற்கு தற்காலிக பொலிவை கொடுக்கும். இயற்கையான வழிகளில் சருமத்தை பாதுகாப்பதே சிறந்தது. இதைப் பற்றி பார்க்கலாம்.

ஒரு கை அளவிற்கு புதினாவை எடுத்து அதில் மஞ்சள் சேர்த்து அரைத்து முகம் கை, கால்களில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு கழுவவும். இப்பொழுது உங்கள் சருமம் மிருதுவாக இருக்கும்.
வெள்ளரிக்காயை, சர்க்கரையுடன் அரைத்து அதனை பிரிட்ஜில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அதனை முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறையும். முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்தால் இறந்த செல்களால் ஏற்பட்ட கருமை நீங்கும். கடலை மாவு மற்றும் தயிரை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள துவாரங்கள் மறையும். அழுக்குகள் படிவதை தடுக்கும்.

முட்டையில் அதிக புரத சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு மட்டுமல்ல, முடி மற்றும் முகத்திற்கு நல்ல பலனை தரும். முட்டையில் வெள்ளைக் கரு மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து அதனை முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் எண்ணெய் வடிவது குறையும். சருமம் மினுமினுப்பாகும்.

face lotion,rosewater,almond oil,a few drops,daily ,முகப்பொலிவு, ரோஸ்வாட்டர், பாதாம், எண்ணெய், சில துளிகள், தினமும்

சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நிரந்தரமாக நீங்கும். காபி தூள், எலுமிச்சை சாறு, சர்க்கரை இவற்றை கலந்து முகத்தில் ஸ்கர்ப் செய்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கண்டிப்பாக இயற்கையாகவே முகத்தில் பொலிவை அதிகரிக்கலாம்.


இரவு தூங்கும் முன் சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்கை நீக்கிய பின், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை துடைத்து, அதன் பின் சில துளிகள் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி இரவு தூங்கும் முன் தினமும் செய்து வந்தால், பொலிவிழந்து இருக்கும் முகம் பொலிவு பெற்று அழகாக காணப்படும்.

Tags :