Advertisement

உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய இயற்கை தீர்வுகள்!

By: Monisha Sat, 03 Oct 2020 12:00:07 PM

உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய இயற்கை தீர்வுகள்!

தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்ற பொதுவான பாதிப்புதான். இதற்கான தீர்வுகளை இப்போது பார்க்கலாம்.

தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.

நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின், பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.

lips,milk,butter,gooseberry,rose petal ,உதடுகள்,பால்,வெண்ணை,நெல்லிக்காய்,ரோஜா இதழ்

உதடுகளில் ஈரப்பதம் குறையாமலிருக்க அடிக்கடி நீரையும், பழச்சாறுகளையும் பருக வேண்டும் இது உதடு வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும். புண்ணாகிப்போன உதடுவெடிப்புகள் குணமாக நல்லெண்ணெய்யையோ, நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.

எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர உதடுகள் பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும்.

Tags :
|
|
|