Advertisement

முடி உதிர்தலை தடுக்கும் இயற்கை ஷாம்பு!

By: Monisha Fri, 13 Nov 2020 1:06:37 PM

முடி உதிர்தலை தடுக்கும் இயற்கை ஷாம்பு!

நம்மில் பலருக்கும் தலையில் அரிப்பு, எரிச்சல், பொடுகு போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இதனால் முடி ஆரோக்கியமாக செழிப்பாக வளராமல் உதிரும். இந்த முடி உதிர்தலை தடுக்க எளிய முறையில் வீட்டிலேயே ஷாம்பு தயாரித்து பயன்பெறுங்கள்.

தேவையானவை
சீகைக்காய் – 250 கி
குருவி வேர் – 100 கி
வெட்டிவேர் – 100 கி
அகில் – 50 கி
திரவியப்பட்டை – 100 கி
வெந்தயம் – 150 கி
அரப்புத்தூள் – 150 கி
காய்ந்த மருதாணி இலை – 100 கி
காய்ந்த ரோஜா பூ – 100 கி
காய்ந்த செம்பருத்தி – 100 கி

hair loss,dandruff,hair,shampoo,natural ,முடி உதிர்வு,பொடுகு,முடி,ஷாம்பு,இயற்கை

செய்முறை
மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வாங்க வேண்டும். வாங்கிய பொருட்களை வெயிலில் நன்கு காய வையுங்கள். காய்ந்த பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த ஷாம்பு பொடியை பத்திரமாக ஒரு டப்பாவில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

குளிக்கும் பொழுது இந்த ஷாம்பு பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து ஷாம்புக்கு பதிலாக தேய்த்து கொள்ள வேண்டும். குளிக்கும் போது எண்ணெய் தேய்த்து குளித்தால் இரண்டு முறை இந்த ஷாம்பு பொடியை தேய்த்து குளியுங்கள். இதனை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள். பிறகு ஷாம்பு வாங்கவே மாட்டீர்கள்.

Tags :
|