Advertisement

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் இயற்கை குறிப்புகள்!

By: Monisha Sat, 10 Oct 2020 11:19:13 AM

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் இயற்கை குறிப்புகள்!

பெண்களே உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரித்து முகம் பொலிவோடு மின்ன வேண்டுமா? இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை குறிப்புகளை பயன்படுத்தி பயன் பெறுங்கள்!

மஞ்சள் மற்றும் தக்காளி
மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு
எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.

பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

face,tomatoes,potatoes,milk powder,lemon juice ,முகம்,தக்காளி,உருளைக்கிழங்கு,பால் பவுடர்,எலுமிச்சை சாறு

துளசி
முக்கியமாக துளசி அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

கடலை மாவு
கடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

சந்தன மாஸ்க்
சந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும். ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Tags :
|