Advertisement

பாத வெடிப்பை சரி செய்யும் இயற்கை குறிப்புகள்!

By: Monisha Fri, 02 Oct 2020 1:04:16 PM

பாத வெடிப்பை சரி செய்யும் இயற்கை குறிப்புகள்!

குளிர்காலத்தில் தோல் வறண்டு, உயிரற்றதாக மாறி, வெடிப்புகள் விட தொடங்குகிறது. குறிப்பாக குதிகால் பகுதியில் ஏற்படும் வெடிப்பு இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையாகும்.

எண்ணெய் மசாஜ் சிறிதளவு எண்ணெயை எடுத்து பாதத்தின் வலி கொண்ட இடத்தில் மசாஜ் செய்யும் போது நிவாரணம் கிடைக்கிறது. சிறந்த பலன் பெற ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை எடுத்து கொண்டு அதனை மிதமாக சூடுப்படுத்தி, வலி உள்ள இடத்தில் சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். பாதிக்கபட்ட இடத்தை சுற்றியுள்ள இரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது மற்றும் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கிறது. வலி குறையும் வரை இதை தொடர்ந்து பல நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம்.

winter,dry skin,foot rash,olive oil,ice pack ,குளிர்காலம், தோல் வறட்சி,பாத வெடிப்பு,ஆலிவ் எண்ணெய்,ஐஸ் பேக்

ஐஸ் பேக் பாதத்தில் பாத அழற்சியால் ஏற்பட்ட வீக்கத்தினை மற்றும் வலியை குறைக்க ஐஸ் பேக்கை பயன்படுத்துவது வீட்டிலேயே செய்ய கூடிய சிறந்த தீர்வாகும். சில ஐஸ் கட்டிகளை பருத்தி துண்டை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் சில நிமிடங்களுக்கு ஒற்றி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது கட்டியும் வீக்கமும் குறையும்.

வினிகர் பாத அழற்சியினால் ஏற்பட்ட வலியையும், வீக்கத்தினையும் குறைக்க வினிகர் சிறந்த துணை புரிகிறது. சூடான மற்றும் குளிர்ந்த வினிகரை கலந்து எடுத்து இப்பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கலாம். நீரையும் வினிகரையும் சம அளவு கலந்து எடுத்து கொண்டு சில நிமிடங்களுக்கு சூடாக்கி பின் ஒரு பருத்தி துணியை அதனுள் மூழ்க செய்து எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். இந்த சிகிச்சையை முடித்த பின் பாதங்களுக்கு ஈரமூட்ட க்ரீம் பயனபடுத்தலாம்.

Tags :
|