Advertisement

கரும்புள்ளிகளை போக்க உதவும் இயற்கை குறிப்புகள்!!

By: Monisha Fri, 18 Sept 2020 3:31:43 PM

கரும்புள்ளிகளை போக்க உதவும் இயற்கை குறிப்புகள்!!

முகம் என்ன தான் பளபளப்பாக இருந்தாலும், முகத்தில் ஆங்காங்கே உள்ள கருமையும், கரும்புள்ளிகளும் முகத்தின் அழகை குறைத்துவிடும். இந்த கரும்புள்ளிகளை போக்க வீட்டிலேயே இருக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

கொத்தமல்லி
கொத்தமல்லி இலையானது உணவுக்கு நறுமனத்தையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களது சருமத்திற்கு அழகையும் கொடுக்கிறது. கொத்தமல்லி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் விரைவாக மறைந்துவிடும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சர்க்கரையை கலந்து முகத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்குவதோடு, முகம் பளபளப்பாக இருக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் நீங்கும்.

blackheads,face,beauty,coriander,lemon ,கரும்புள்ளி,முகம்,அழகு,கொத்தமல்லி,எலுமிச்சை

ஓட்ஸ்
ஓட்ஸ் முகத்திற்கு மிகவும் சிறந்த ஒரு பொருளாகும். ஓட்ஸை தூள் செய்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து, முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

தயிர்
தயிர் மற்றும் எலுமிச்சை இரண்டுமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

தக்காளி
தக்காளியை பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு, முகம் பளிச்சென மாறும்.

Tags :
|
|