Advertisement

சருமம் மற்றும் முக அழகை மேம்படுத்த இயற்கை வழிகள்

By: Nagaraj Sat, 25 Feb 2023 11:53:57 PM

சருமம் மற்றும் முக அழகை மேம்படுத்த இயற்கை வழிகள்

சென்னை: முகத்தில் கருமைகள், முகப்பருக்கள், வெள்ளை வீழுதல் மற்றும் கருவளையம் போன்றவற்றின் தாக்கம் இருக்கும் போது முக அழகு குறைவாதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினமும் இப்படி, செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். மேலும், உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

அடுத்து, பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தொடர்ந்து, தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும்.

clean face,groundnut flour,milk,sandalwood,scar,turmeric, ,கடலை மாவு, சந்தனம், தழும்பு, பால், மஞ்சள், முகம் சுத்தமாகும்

காலையில் வெறும் வயிற்றில், அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும்.

தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு, 10 நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

Tags :
|
|