Advertisement

முகத்தின் அழகை பாதுகாக்கும் ஆலிவ் எண்ணெய்!

By: Monisha Tue, 25 Aug 2020 5:29:36 PM

முகத்தின் அழகை பாதுகாக்கும் ஆலிவ் எண்ணெய்!

ஆலிவ் மரத்தின் விதையிலிருந்து எடுக்கப்படும் ஆலிவ் எண்ணெய், மத்திய தரைக்கடல் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களில் இதுவும் ஒன்று. இதில் முழுக்கமுழுக்க நல்ல கொழுப்பு மட்டுமே இருக்கிறது. ஆலிவ் எண்ணெய் சருமத்துக்கு ரொம்பவும் நல்லது.

ஆலிவ் எண்ணெயில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் முகத்தின் அழகை பாதுகாத்து, சருமத்தை மேம்படுத்த உதவும். இது முகத்தில் ஏற்படும் பரு, சுருக்கம், வடு, தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை முற்றிலுமாக போக்க உதவும். ஆலிவ் எண்ணெயின் வைட்டமின்கள் சருமத்தின் செல்கள் சேதமடையாமல் பாதுகாத்து, சருமத்தை ஒளிரச் செய்யும். ஆலிவ் எண்ணெயை அன்றாடம் படன்படுத்தி வந்தால் சருமம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஆலிவ் எண்ணெயை சூடுப்படுத்தாமல் அல்லது வேதிப் பொருள்கள் சேர்க்காமல் பிரித்து எடுக்கப்படும் எண்ணெயை வாங்க வேண்டும். ஏனென்றால், இம்முறையில்தான் எண்ணெயில் உள்ள ஊட்டப்பொருள்களும் வைட்டமின்களும் தக்க வைக்கப்படும்.

face,beauty,scars,blackspots,skin ,முகம்,அழகு,தழும்புகள்,கரும்புள்ளிகள்,சருமம்

ஆலிவ் எண்ணெயில் நிரம்பியுள்ள வைட்டமின்கள், மினரல்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு ரொம்ப நல்லது. இது சிறந்த மாய்ஸ்சுரைசிங் பொருள், முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் போன்ற வறண்ட பகுதிகளில் பயன்படுத்த ஏற்றது. சொரியாசிஸ், எக்சிமா போன்ற சருமப் பிரச்சினைகளுக்கு, ஆலிவ் ஆயில் உள்ள ஆயின்மெண்ட்கள் பலன் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொடுகை எதிர்க்கவும், உடைந்த கூந்தலை சரி செய்யவும், கூந்தலில் பளபளப்பை கூட்டவும் இது உதவும். வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும் ஆலிவ் ஆயில் சிறந்தது. மசாஜ்களிலும், மற்ற எசன்ஷியல் ஆயில்களுடனும் ஆலிவ் ஆயில் பயன் படுத்தப்படுகிறது.

உங்கள் சருமத்தில் அடிக்கடி பருக்கள் ஏற்படும் என்றால், கவனமாக இருக்கவும். எண்ணெய் சருமத் துளைகளை மூடி, பிளாக்ஹெட்களையும் பருக்களையும் அதிகரிக்கும். ஆலிவ் ஆயில் எரிச்சல் எதையும் ஏற்படுத்தாது என்றாலும், சில வகை சருமங்களில் தடிப்புகளை (ராஷ்களை) ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
|
|
|