Advertisement

சருமப் பிரச்சினைகளை குணப்படுத்தும் வெங்காயம்!

By: Monisha Thu, 23 July 2020 12:55:06 PM

சருமப் பிரச்சினைகளை குணப்படுத்தும் வெங்காயம்!

நாம் தினமும் உண்ணும் உணவில் வெங்காயம் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த வெங்காயம் சருமத்தை புத்துணர்ச்சி பெறவும் செய்கின்றது. வெங்காயத்தை வெளியே பூசுவதனால் இதில் உள்ள விட்டமின் ஏ கொலஜன் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் சருமம் மிருதுவாகின்றது. மேலும் இதில் உள்ள விட்டமின் ஈ சூரியக் கதிர்களின் பாதிப்பு, தோல் சுருக்கங்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. வெங்காயத்தில் போதியளவு விட்டமின் ஏ, சி, ஈ இருப்பதனால் எல்லா வகையான சருமப் பிரச்சினைகளையும் இலகுவாக குணப்படுத்துகிறது.

சருமம் வயதடைவதை தடுத்தல்
வெங்காயத்தில் உள்ள விட்டமின் சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் சுருக்கங்களை நீக்கி வயதடைவதை தடுக்கும்.

தேவையானவை: 1 சிறிய வெங்காயம், பஞ்சு, நீர்.

பயன்படுத்தும் முறை: வெங்காயத்தை வெட்டி அதில் உள்ள சாற்றை எடுத்து பஞ்சினால் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். சிறந்த தீர்விற்கு வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகள் இதனை செய்வது சிறந்தது.

skin problem,onion,freshness,vitamins ,சருமம்,பிரச்சினை,வெங்காயம்,புத்துணர்ச்சி,விட்டமின்கள்

பொலிவான சருமத்திற்கு
சருமம் களை இழந்து சோர்வாக இருக்கும் போது வெங்காயத்தை பயன்படுத்துவதனால் அதில் உள்ள விட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியும் புதுப் பொலிவையும் பெற்றுத் தரும்.

தேவையான பொருட்கள்: ஒரு கப் நீர்,ஒரு கப் வெங்காயம்.

பயன்படுத்தும் முறை: வெங்காயத்தை வெட்டி அரைத்து பசையாக எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் அல்லது கழுத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

பிரகாசமான சருமத்திற்கு
சருமத்தில் உள்ள நிறத்திட்டுக்களையும், கரும்புள்ளிகளையும் நீக்கி பிரகாசமான சருமத்தை பெற இதனை வாரத்திற்கு இரு தடவை செய்வது சிறந்தது.

தேவையான பொருட்கள்: ஒரு வெங்காயம், 3 மேசைக்கரண்டி தயிர்.

பயன்படுத்தும் முறை: வெங்காயத்தை தோலை நீக்கி சிறிதாக வெட்டி பசையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் தயிரை சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

Tags :
|