Advertisement

அழகிய மென்மையான சருமத்தை தரும் பப்பாளி!

By: Monisha Tue, 07 July 2020 1:32:27 PM

அழகிய மென்மையான சருமத்தை தரும் பப்பாளி!

மிதவெப்ப மண்டலத்தை சேர்ந்த பழமான பப்பாளிக்கு பல்வேறு பயன் மிக்க குணங்கள் உள்ளன. இந்த பழத்தை முடி மற்றும் தோல் பராமரிப்புக்கான கனியாகவும் பயன்படுத்தலாம். இந்த பழத்தை வாங்கி சருமத்தில் நேரடியாக பயன்படுத்தி பயன் பெற முடியும்.

பப்பாளியில் டிர்யு என்று அழைக்கப்படும் பீட்டா ஹைட்ராக்ஸைல் அமிலம் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது தோலின் மேல்பகுதியில் உள்ள இறந்த பகுதிகளை நீக்கி, புதிய தோலை மென்மையாகவும், வளமாகவும் மாற்றும் சக்தி டீர்யு-விற்கு உள்ளது. மேலும், பப்பாளியில் உள்ள குணங்கள் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பையும் நீக்கி அரிப்பும் வராமல் தடுக்கின்றன.

உங்களுடைய தோலை மென்மையாக வைத்திருக்க விரும்பினால், பப்பாளிப் பழத்தை எடுத்து மெல்லிய படலமாக உங்களுடைய தோலில் தடவி, சில நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவிக் கொள்ளுங்கள். சில பேருக்கு பப்பாளி அலர்ஜியாக இருக்கும் என்பதால், இதனை சற்றே கவனித்து, கவனமாக பயன்படுத்த வேண்டும்.

papaya,beauty,health,skin,soft ,பப்பாளி,அழகு,ஆரோக்கியம்,சருமம்,மென்மை

வயதாகும் போது சிலருடைய உடலில் ஆங்காங்கே நிறமிகள் சரிசமமில்லாத வகையில் உருவாகும். பப்பாளியில் தயாரிக்கப்படும் ஃபேஸியல் மாஸ்க் மூலம், இந்த சரிசமமில்லாத நிறமிகள் உள்ள இடங்களை சரி செய்ய முடியும். இந்த ஃபேஸியல் மாஸ்கை தயார் செய்ய 2 தேக்கரண்டிகள் தேனுடன், ½ கோப்பை பப்பாளியை அரைத்து வைத்தால் ஃபேஸியல் மாஸ்க் தயார். இந்த கலவையை முகத்தில் மெலிதாக தடவி 15-20 நிமிடங்களுக்கு வைத்திருந்து விட்டு, வெந்நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்த பின்னர் மாய்ஸ்ட்ரைஸரை தோலில் போட்டுக் கொள்ளுங்கள்.

ஒருவருடைய அழகை மேம்படுத்துவது வெளிப்புறத்தை அடிப்படையாக கொண்டது, ஆனால் உண்மையான அழகு என்பது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் பராமரிப்பது தான். பப்பாளி பழத்தை சாப்பிடுவது உடல் நலத்தை மேம்படுத்தும். பப்பாளியில் வைடடமின் சி உள்ளது. அது மிகவும் திறன் மிக்க ஆக்சிஜன் எதிர்பொருளாக இருப்பதால் வயாதாகும் போது ஏற்படும் சேதங்களை பெருமளவு குறைக்கிறது.

Tags :
|
|
|
|