- வீடு›
- அழகு குறிப்புகள்›
- முகச்சுருக்கம், வறட்சியை போக்கும் தன்மை கொண்ட பப்பாளி
முகச்சுருக்கம், வறட்சியை போக்கும் தன்மை கொண்ட பப்பாளி
By: Nagaraj Tue, 13 Oct 2020 09:41:27 AM
முகச்சுருக்கம், வறட்சி ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது பப்பாளி பழம்.
பப்பாளிப் பழத்தினை முகத்திற்குப் பயன்படுத்தினால் முகச் சுருக்கம், வறட்சி என அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வினைப் பெறலாம். முக அழகினைக் கூட்டும் பப்பாளிப் பழ ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பப்பாளிப் பழம்- பாதியளவு
தேங்காய்ப் பால்- அரை கப்
முந்திரி- 4
செய்முறை: பப்பாளிப் பழத்தினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுத்து முந்திரியை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து மைய அரைக்கவும்.
இறுதியில் இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவிடவும். அடுத்து பேஸ்பேக்கினை குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.