Advertisement

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

By: Monisha Wed, 23 Sept 2020 2:21:34 PM

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். ஆனால் அவற்றில் ஆயில் ஸ்கின் என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஹார்மோன்களே காரணம். எனவே, இத்தகைய சருமத்தினர், ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம். பழங்கள், காய்கறிகள் மற்றும் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

எண்ணெய் பசை சருமத்திற்கும் வைட்டமின் பி2 மற்றும் பி5 பற்றாக்குறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இந்த வைட்டமின்கள் அதிகளவு நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

புரோக்கோலி, முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் ஆகிய காய்கறிகள், அதிகளவு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இவை ஹார்மோன் சமநிலை ஏற்பட உதவுகிறது. மாசுமருவற்ற சருமம் பெற, அதிகளவு சிங்க் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காளானில் அதிகளவு சிங்க் சத்துக்கள் நிறைந்துள்ளன.

oily skin,hormones,bad fats,fiber,beauty ,எண்ணெய் பசை சருமம்,ஹார்மோன்,கெட்ட கொழுப்பு,நார்ச்சத்து

பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுப் பொருட்களை வைத்து மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றால், செனஸ்ட்ரோஜென் எனும் ரசாயனம் உருவாகி, அவை ஹார்மோன் மாற்றங்கள் நிகழ வழி வகுத்துவிடும்.

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க கடைந்த மோரை எடுத்து கொள்ளுங்கள், அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும். பின்பு 15 நிமிடம் வரை காத்திருக்கவும். பின்பு வெதுவதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் வழியும் எண்ணெய் மறைந்துவிடும்

உணவுப் பட்டியலில் இருந்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவை நீக்கிவிடுங்கள்.

Tags :
|