Advertisement

முடி உதிர்தலை குறைக்கும் பெப்பர்மின்ட் எண்ணெய்!

By: Monisha Wed, 12 Aug 2020 12:24:15 PM

முடி உதிர்தலை குறைக்கும் பெப்பர்மின்ட் எண்ணெய்!

புதினாவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. புதினா எண்ணெயில் அதிக நலன்கள் உள்ளது. இரும்புசத்து, மெக்னீசியம், தாதுக்கள், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெப்பர்மின்ட் எண்ணெய் உங்கள் அழகு பொருட்களில் இருக்க வேண்டிய ஒன்று.

முடி வளர்வதை அதிகரிக்கும் முடி கொட்டும் பிரச்சனை உங்களுக்கு அதிகமாக இருந்தால் நிச்சயம் இந்த எண்ணெய் உங்களுக்கு தேவைப்படும். அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால் உங்கள் முடி துளைக்குள் சென்று முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். மேலும் எண்ணெய் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

இந்த எண்ணெயில் பொல்கோன் மற்றும் மெண்டோன் இருப்பதால் முடியின் வேரை வலுப்படுத்தி முடி உதிர்தலை குறைக்கும். அதற்கு உச்சந்தலையில் அடிக்கடி தேய்த்து வந்தாலே போதும்.

mint,hair loss,peppermint oil,beauty,health ,புதினா,முடி உதிர்தல்,பெப்பர்மின்ட் எண்ணெய்,அழகு,ஆரோக்கியம்

இரவில் தூங்க விடாமல் தலையில் அரிப்பு எடுக்கிறதா? பெப்பர்மின்ட் உங்களுக்கு நிச்சயம் உதவும். இதில் ஈரப்பதமூட்டும் பண்பு இருப்பதால் உங்கள் தலையின் ஈரப்பசையை காத்து அரிப்பை நீக்கும். நீங்கள் தினமும் பயன்படுத்தும் எண்ணெய்யில் கொஞ்சமாக பெப்பர்மின்ட் எண்ணெய்யை சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து கழுவவும். இது உங்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.

மென்தால் இருப்பதால் நல்ல வாசனையையும் புத்துணர்வையும் பெப்பர்மின்ட் எண்ணெய் கொடுக்கும். இந்த வாசனை பேன்களை கொன்று கூந்தலுக்கு விடுதலை தருகிறது. இரவு தூங்கும்முன் எண்ணெய் தேய்த்து காலையில் அலசினால் போதும். உங்கள் பிரச்னை தீரும்.

Tags :
|
|