- வீடு›
- அழகு குறிப்புகள்›
- பருக்களை தேன் பயன்படுத்துவதன் மூலம் போக்கலாம்
பருக்களை தேன் பயன்படுத்துவதன் மூலம் போக்கலாம்
By: Nagaraj Thu, 24 Nov 2022 10:17:04 PM
சென்னை; சருமத்தின் அழகையே பருக்கள் கெடுத்து விடும். அத்தகைய பருக்களை தேன் பயன்படுத்துவதன் மூலம் போக்கலாம். அதற்கு இரவில் படுக்கும் போது பருக்கள் உள்ள இடத்தின் மீது தேனைத் தடவிக் கொள்ள வேண்டும்.
வேண்டுமானால் தேனுடன், சிறிது டீ-ட்ரீ ஆயில் அல்லது லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்தும் தடவிக் கொள்ளலாம். இதனால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.
தேனில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை தினமும் கழுவி வருவதும் நல்லது. இதனால் முகத்தில் போடப்பட்டுள்ள மேக்கப் முற்றிலும் நீங்குவதோடு, சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராகவும் இது செயல்படும்.
வறட்சியான சருமம் உள்ளவர்கள், தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் வெஜிடேபிள் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வறட்சியை நீக்கி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள முடியும்.