Advertisement

நகங்களை சரியாக பராமரித்தால் உடையாது... சில யோசனைகள்

By: Nagaraj Thu, 19 Jan 2023 1:23:39 PM

நகங்களை சரியாக பராமரித்தால் உடையாது... சில யோசனைகள்

சென்னை: நகங்கள் பராமரிக்க யோசனை... ஆலிவ் எண்ணைய்யை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

சிலருக்கு நகங்கள் அடிக்கடி உடையும். சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும்படி வைத்தால் நகங்கள் உறுதியாகும். மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து, அதனால் நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால் நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

நகத்தை பற்களால் கடிக்கக் கூடாது. சமயங்களில் உங்களையும் அறியாமல் ஆழமாக கடித்து வைக்க, அதனால் நகங்களின் சீரான வளர்ச்சி பாதிக்கப்படும். சிலருக்கு நகங்கள் காய்ந்து வறண்டு காணப்படும். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில், அதில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து விட வேண்டும். அதில் நகமும் கைகளும் நன்றாக மூழ்கும்படி சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இது கைகளும், நகமும் வறட்சி அடைவதைத் தடுக்கும்.

கிளிசரினும்,எலுமிச்சைச் சாறும் கலந்து அதை பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் நகங்கள் பளபளப்பாக இருக்கும். பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து கடலை மாவினால் கழுவினாலும் நகங்கள் பளபளப்படையும்.

Tags :
|
|
|