Advertisement

முடி வளர்ச்சிக்கு உதவு சோற்று கற்றாழை ஜுஸ்

By: Nagaraj Wed, 26 Oct 2022 08:57:58 AM

முடி வளர்ச்சிக்கு உதவு சோற்று கற்றாழை ஜுஸ்

சென்னை: சோற்றுக் கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் அனைத்து விதமான தாதுக்களும் இருக்கிறது. சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் இது நல்லது. இதில் முடி வளர்ச்சிக்கு கற்றாழை ஜூஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

இந்த கற்றாழை ஜூஸை தொடர்ந்து பத்து நாட்கள் பருகி விட்டு பின்னர் 10 நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் 10 நாட்கள் தொடர்ந்து பருகலாம்.

தேவையான பொருட்கள் :
சோற்றுக் கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

hair growth,juice,aloe,helps,honey ,முடி வளர்ச்சி, ஜுஸ், கற்றாழை, உதவுகிறது, தேன்

செய்முறை: சோற்றுக் கற்றாழை தோலை முழுவதுமாக நீக்கி அதில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழை ஜெல்லை மிக்சியில் போட்ட அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த ஜூஸில் தேன் கலந்து சாப்பிடவும். சூப்பரான சோற்றுக் கற்றாழை ஜூஸ் ரெடி. இது முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|