Advertisement

கரு வளையத்தை போக்க ரோஜா இதழ் பேக்!!!

By: Nagaraj Fri, 18 Sept 2020 5:32:32 PM

கரு வளையத்தை போக்க ரோஜா இதழ் பேக்!!!

கரு வளையம் என்பது பல பெண்களின் மனதினை வாட்டி வருத்தும் பிரச்சினையாக இருந்து வருகின்றது, எவ்வளவு டிப்ஸ்கள் தான் பின்பற்றுவது? இருந்தாலும் ஒரு தீர்வும் கிடைக்கவில்லையே என்று வருந்துபவரா நீங்கள்? உங்களுக்கான தீர்வு இதுதான்.

தேவையானவை:

ரோஜாப் பூ- 1
தேங்காய்ப் பால்- 4 ஸ்பூன்
வெள்ளை எள்- 1 ஸ்பூன்

செய்முறை: வெள்ளை எள்ளினை லேசாக வாணலியில் வறுக்கவும்.
அதனை மிக்சியில் போட்டு மைய பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து ரோஜா இதழ்களை தேங்காய்ப் பால் மற்றும் லேசாக தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் ரோஜா இதழ் பேக் ரெடி.
இதனை கருவளையம் உள்ள இடங்களில் அப்ளை செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Tags :