Advertisement

உங்களின் சருமம் பொலிவுடன் விளங்க உதவும் ரோஸ் வாட்டர்

By: Nagaraj Thu, 11 June 2020 6:50:18 PM

உங்களின் சருமம் பொலிவுடன் விளங்க உதவும் ரோஸ் வாட்டர்

உங்களின் சருமம் பளபளப்பை இழந்து காணப்படுகிறதா. வெயில், தூசி இவற்றால் உங்களின் சருமம் பொலிவை இழந்து விட்டதாக நினைக்கிறீர்களா. அட எளிமையான முறையில் உங்கள் சரும அழகை உயர்த்திக் கொள்ளலாம். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் சரும அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க பயன்படும் பொருட்களில் ஒன்றுதான் ரோஸ் வாட்டர். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைகளை தீர்க்கிறது.
அதுமட்டுமல்ல முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை முறையாக பயன்படுத்தி வரும் போது சருமத்தில் உள்ள எரிச்சல், அதிகப்படியான எண்ணெய், வறட்சி, கருமை ஆகியவை நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

refreshing,rosewater,facial dirt,will get brilliant ,புத்துணர்ச்சி, ரோஸ்வாட்டர், முகத்தில் அழுக்குகள், பொலிவு பெறும்

* தினமும் குளிக்கும் போது நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

* வறட்சியான சருமம் உள்ளவர்கள், ரோஸ் வாட்டரை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சருமம் வறட்சியின்றி, மென்மையோடு அழகாக இருக்கும்.

* ரோஸ் வாட்டர் உள்ள பாட்டிலை அரை மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்களில் உள்ள வீக்கம் குறைந்து, கண்கள் அழகாக மாறும்.

refreshing,rosewater,facial dirt,will get brilliant ,புத்துணர்ச்சி, ரோஸ்வாட்டர், முகத்தில் அழுக்குகள், பொலிவு பெறும்

* இரவில் படுக்கும் போது ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால் மேக்கப் நீங்குவதோடு சருமமும் மென்மையோடு இருக்கும்.

* ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாக வெளிக்காட்டும்.

* பொதுவாக வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் முகத்தில் அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.

Tags :