Advertisement

சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய..!

By: Monisha Sat, 13 June 2020 3:36:09 PM

சரும அழகை கெடுக்கும் வடுக்கள் மற்றும் தழும்புகள் மறைய..!

வடுக்கள் மற்றும் தழும்புகள் நமது சரும அழகை கெடுத்து விடுகிறது. திடீரென உடலில் தோன்றும்
கோடுகள் பொதுவாக இடுப்பு, தொடைகள் அல்லது அடிவயிறு போன்ற இடங்களில் தோன்றும். திடீரென எடை மாற்றம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மோசமான பழக்கம் ஆகியவற்றால் அவை ஏற்படக்கூடும். அவற்றை வீட்டிலேயே சரிசெய்வது எப்படி?

காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட களிம்பு ரொம்ப நாளாக மறையாமல் இருக்கும் தழும்புகளை மறைய செய்யும். காபி மற்றும் தேங்காய் எண்ணையுடன் தயாரிக்கப்பட்ட இக்களிம்பு உடலின் வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே. இது உங்கள் உடலில் அனைத்து பாதிக்கப்பட்ட தோலிற்கும் ஊட்டமளிக்கிறது.

coffee nuts,coconut oil,aloe,mineral water ,காபி கொட்டைகள்,தேங்காய் எண்ணெய்,கற்றாழை,மினரல் வாட்டர்

தேவையான பொருட்கள்
5 தேக்கரண்டி அரைக்கப்பட்ட காபி கொட்டைகள் (75 கிராம்)
3 தேக்கரண்டி ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் (45 கிராம்)
1 தேக்கரண்டி அலோவேரா (கற்றாழை) ஜெல் (15 கிராம்)
2 தேக்கரண்டி மினரல் வாட்டர் (30 மிலி)
மர ஸ்பூன்

செய்முறை
ஒரு கண்ணாடி ஜாடிக்குள் அரைத்த காபித்தூள், தேங்காய் எண்ணெய், அலோ வேரா ஜெல் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்குங்கள். ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை ஒரு சில நொடிகள் கலவையை பெற ஒரு மர ஸ்பூன் கொண்டு நன்கு கலக்குங்கள். குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் ஜாடியை இறுக்க மூடி பத்திரப்படுத்துங்கள்.
பயன்படுத்தும் முறை
வடுக்கள் மற்றும் தழும்புகள் உள்ள பகுதிகளில் பாதிப்பு அளவை பொறுத்து இந்த களிம்பை நன்கு தேய்க்கவும். ஐந்து நிமிடங்கள் மென்மையான மசாஜ் செய்து, பின்னர் அதை மற்றொரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை வாரத்துக்கு 2 முறை அல்லது நேரம் கிடைத்தால் தினமும் கூட செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Tags :
|