Advertisement

முடியாத பிரச்சினையாக உள்ள முடி உதிர்வுக்கு தீர்வு கிடைக்க எளிய யோசனைகள்

By: Nagaraj Thu, 14 May 2020 11:06:20 AM

முடியாத பிரச்சினையாக உள்ள முடி உதிர்வுக்கு தீர்வு கிடைக்க எளிய யோசனைகள்

ஆண்களுக்கு சொட்டை விழுவது பிரச்சனையென்றால், பெண்களுக்கு முடி எலிவால் போல் மாறுவதும், நீளம் குறைவதும்தான் பெரிய பிரச்சனையை உண்டாக்குகிறது. முடி குறிப்பிட்ட நீளத்தை தாண்டி வருவதில்லை. இப்படி முடி பிரச்சனை பலருக்கும் முடியாத பிரச்னையாகதான் உள்ளது.

சிலருக்கு 20 களின் இறுதியிலேயே மெதுவாக சொட்டை ஆரம்பித்துவிடுகிறது. பராமரிப்பு இல்லையென்றால் நாளைடவில் சொட்டை விழுந்துவிடும்.


yeast,compound,fruit,hair length,issue ,ஈஸ்ட், கலவை, பலன், முடி நீளம், பிரச்சினை

முடி வளர்ச்சியை தூண்டும் பல பொருட்களை நாம் பயன்படுத்துவதில்லை. அதில் முக்கியமானதுதான் ஈஸ்ட். ஈஸிட்டில் அதிக ஃபோலிக் அமிலம் இருப்பதால், முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அதிலிருக்கும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது நல்ல மாற்றங்கள் காணலாம்.

இது முடியின் வேர்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து இறந்த செல்களை வெளியேற்றும் தலை சருமத்தை சுத்தப்படுத்தும். முடி உதிர்வை கட்டுப்படுத்தும். துரிதமாக முடி வளரத் தூண்டும்.

yeast,compound,fruit,hair length,issue ,ஈஸ்ட், கலவை, பலன், முடி நீளம், பிரச்சினை

தேவையானவை

ஈஸ்ட் - 3 ஸ்பூன்
தேன் - 6 ஸ்பூன்.

இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். தேவைப்படுமெனில் சிறிது நீர் கலந்து கொள்ளலாம். இதனை தயாரித்த உடன் உடனடியாக பயன்படுத்துதல் முக்கியம். அப்போதுதான் இதன் பலன் அதிகமாக கிடைக்கும்.

உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன் பின் தலைமுடியை அலச வேண்டும். வாரம் இரு முறை செய்தால் முடி நீளமாக வளரும்.

Tags :
|
|