Advertisement

உங்கள் முகத்தின் வசீகரம் கூட இந்த எளிய பொருட்கள் போதும்!

By: Monisha Fri, 11 Sept 2020 3:05:10 PM

உங்கள் முகத்தின் வசீகரம் கூட இந்த எளிய பொருட்கள் போதும்!

உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு, வாழைப் பழம், ஆரஞ்சு பழம், புதினா போன்ற எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தினால் போதும். இதனால் செலவும் குறைவு உங்கள் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள். முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.

face,charming,banana,orange,mint ,முகம்,வசீகரம்,வாழைப் பழம், ஆரஞ்சு பழம், புதினா

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.

வெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.

Tags :
|
|
|