Advertisement

கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்க எளிய வழிமுறைகள்

By: Nagaraj Thu, 19 Jan 2023 1:02:37 PM

கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்க எளிய வழிமுறைகள்

சென்னை: பெண்களுக்கு முடி அழகு முக்கால் அழகு என்பார்கள். அன்றன்று வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே கூந்தலைப் பராமரிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகள் உங்களுக்காக.

உடைத்த நாளான தேங்காயை சமையலில் சேர்க்க பலர் பயப்படுவார்கள். அதைத் தூக்கி எறியாமல் இதில் சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். கூந்தலின் மயிர்க்கால்கள் வலுப்பெற இது உதவும்.

தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழிந்து, அதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி அரைமணி நேரம் ஊறவைத்து பிறகு சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து குளிக்கலாம். சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப்பொடி, பயத்தமாவு சம அளவில் கலந்து ஊறவைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

Tags :
|
|