Advertisement

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க எளிய வழிமுறைகள்

By: Nagaraj Sat, 04 Feb 2023 9:58:03 PM

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க எளிய வழிமுறைகள்

சென்னை: முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க எளிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனப் பொடி சிறிதளவு பால் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவிய பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை தன்மை குறைந்து முகம் பளிச்சிடும்.

அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும்.சருமத்தில் எண்ணெய் பசை குறைய முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க நன்கு கடைந்த மோரை எடுத்து அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவி விடவும்.

இவ்வாறு செய்து வந்தால் மோரில் உள்ள நல்ல பாக்டிரீயாக்கள் சருமத்தில் உண்டாகும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி முகத்தை பொலிவடைய செய்யும்.

oily,icy,refreshing,skin-brightening ,எண்ணெய் பசை, ஐஸ்கட்டி, புத்துணர்வு, சருமம், ஜொலிக்கும்

பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் பேக் போல போட்டு மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் பளபளவென்று இருக்கும். ஒரு ஸ்பூன் தேன் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு 10 நிமிடங்கள் நன்கு உலர விடவும். பின்னர் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைத்து விட்டு சிறது நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசையினால் ஏற்படும்

பருக்களை மறைய செய்து முகத்திற்கு பொலிவை தரும்.முகத்தில் எண்ணெய் பசை வர காரணம். ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தை அடிக்கடி துடைத்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும். 1 முதல் 2 ஸ்பூன் ஓட்ஸை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்டுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 2 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் ஜொலிக்கும்.

சருமத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த ஐஸ் கட்டி உதவும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும், எண்ணெய் வழியாமலும் இருக்கும். ஐஸ் கட்டியை நேரடியாக முகத்தில் பயன்படுத்தக் கூடாது.

Tags :
|
|