Advertisement

மன உளைச்சலைத் தரும் வறண்ட சருமத்தை போக்க எளிய டிப்ஸ்!

By: Monisha Fri, 21 Aug 2020 5:38:25 PM

மன உளைச்சலைத் தரும் வறண்ட சருமத்தை போக்க எளிய டிப்ஸ்!

வறண்ட சருமம் என்பது பெரும்பாலான பெண்களுக்கு மன உளைச்சலைத் தரக்கூடியது. எவ்வளவுதான் மேக் அப் போட்டாலும், தோல் வறட்சியுடன் இருப்பது, பொலிவு இழந்த தோற்றத்தைக் கொடுக்கும். இதை எளிய முறையில் சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆப்பிள் வறண்ட சருமத்துக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது. ஆப்பிளைத் தோலை நீக்கிவிட்டு, அதைத் துண்டு துண்டாக நறுக்கி, பாலில் போட்டுக் கொதிக்க வையுங்கள். கெட்டியாகத் தயிர் போல ஆகிவிடும். அதை நன்றாக ஆற வைத்து தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து முகத்தில் பூசி, சுமார் அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்பு கழுவினால் முகம் பொலிவு பெறும். பால் இல்லாமல் இன்னொரு வழியும் இருக்கிறது. அதே போல ஆப்பிள் துண்டுகளை நன்றாக அரைத்து தேன், ஓட்ஸ் பவுடர், ஆகியவற்றுடன் சேர்த்து க்ரீம் போல ஆக்கி அதையும் மேற்குறிப்பிட்ட முறையில் அரை மணி நேரம் முகத்தில் போட்டு பின்பு கழுவலாம். இரண்டு வழிகளிலும் வறண்ட சருமத்தைப் போக்க முடியும். உங்களுக்கு எந்த வகை வசதியாக இருக்கிறதோ அதைப் பின்பற்றுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

dry skin,apple,tomato,cucumber,face ,வறண்ட சருமம்,ஆப்பிள்,தக்காளி,வெள்ளரிக்காய்,முகம்

வெறும் மோர் போதுமா வறண்ட சருமத்தைப் போக்க? என்ற சந்தேகம் இருக்கிறதா? நிச்சயம் மோர் பலனளிக்கும். தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட மோரை, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலரவைத்து, பின்பு நன்கு கழுவினால், முகப்பொலிவை உணரலாம்.

தக்காளி பெரும்பாலும் எண்ணெய் சருமத்தைக் கொண்டவர்களுக்கே பலனளிக்கும். இருப்பினும், வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் இதைச் சாறாக பிழிந்து அதை முகத்தில் தடவி உலர வைத்து, பின்பு அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் உரியப் பலனை உணர்வீர்கள்.

சூட்டைத் தணிக்க வெள்ளரிதான் பெஸ்ட். சூட்டையே தணிக்கும் வெள்ளரி, வறண்ட சருமத்திற்குப் பொலிவு தராதா என்ன? வெள்ளரியைத் துண்டு துண்டாக நறுக்கி முகத்தில் தடவி உலர வைக்கலாம். 20 முதல் 30 நிமிடங்களில் சருமத்தைப் பளபளப்பாக்கி விடும்.

Tags :
|
|