Advertisement

முகத்தில் எண்ணெய் பசை நீங்க எளிமையான டிப்ஸ்

By: Nagaraj Fri, 16 Sept 2022 11:32:28 PM

முகத்தில் எண்ணெய் பசை நீங்க எளிமையான டிப்ஸ்

சென்னை: முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க எளிமையான டிப்ஸ் இருக்கு. அதுவும் வீட்டில் உள்ள பொருளை வைத்தே செய்யலாம். என்னன்னு பார்ப்போமா!!!

ஒவ்வொரு மனிதருக்கும் சருமம் என்பது வேறுபடும். ஒருவருக்கு வறண்ட சருமமாகவும் மற்றொருவருக்கு எண்ணெய் பிசுக்கு உள்ள சருமமாகவும், வேறொருவருக்கு இரண்டும் கலந்த சருமமாகவும். இதில் குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு தான் அதிக தொந்தரவுகள் உள்ளது. இப்பொழுது பார்த்தாலும் முகத்தில் எண்ணெய் வடிந்தபடியே இருக்கும். இந்த வழிமுறையை கடைப்பிடித்தால் எண்ணெய் பிஸிக்கல் இருந்து விடுபடலாம்.

viscosity,tomato juice,egg white,coconut milk,honey ,பிசுபிசுப்பு, தக்காளி சாறு, வெள்ளை கரு, தேங்காய்ப்பால், தேன்

முதலாவதாக கடலை மாவில் முகம் கழுவ வேண்டும். ஓட்ஸ் எடுத்து அது நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி வரலாம். தேன் மற்றும் தேங்காய்ப்பால் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வர வேண்டும்.

முட்டையுடைய வெள்ளை கரு மற்றும் லெமன் சாறு கலந்து முகத்தில் தடவலாம். வெண்டைக்காயை நன்றாக அரைத்து அதில் தக்காளி சாறு விட்டு முகத்தில் பூசி வர முக பிசுபிசுப்பு விரைவில் குணமாகும். பாதாம் மற்றும் தேன் இவை இரண்டையும் கலந்து முகத்தில் போட்டு வரலாம். இதனை தினந்தோறும் செய்து வர எண்ணெய் பிசுக்கு நீங்கி முகம் பளபளவென பொலிவாக இருக்கும்.

Tags :