Advertisement

பனிக்காலத்தில் சருமத்தை பராமரிக்க எளிய குறிப்புகள்!!

By: Monisha Thu, 12 Nov 2020 3:36:39 PM

பனிக்காலத்தில் சருமத்தை பராமரிக்க எளிய குறிப்புகள்!!

பனிக்காலத்தில் நம் கால்களிலும், கைகளிலும் வெள்ளைத்திட்டுக்கள் போன்று தெரியும். வாயைச் சுற்றி
இழுப்பது மாதிரி இருக்கும். முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கம் தெரியும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும்
பொருள்களை வைத்தே சரிசெய்து கொள்ள முடியும்.

பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப் பசையை உலரச் செய்து சருமம் வறண்டு சுருங்கி விட வைக்கிறது.

தினமும் குளிப்பதற்கு முன்பு, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி சூடு பறக்கத்தேயுங்கள். 10 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குளியுங்கள். இப்படிச் செய்தால் குளித்தப் பிறகு சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படாது.

 ,பனிக்காலம்,சருமம்,அழகு,சுருக்கம்,வறட்சி

அல்லது வாரம் இரண்டு முறை நல்லெண்ணெயைத் கால் முதல் தலை வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பின் பச்சைப்பயிறு மாவால் தேய்த்து நன்றாக குளியுங்கள்.

நீங்கள் சாப்பிடும் பழங்களின் சில துண்டுகளை அரைத்து, பாலுடன் கலந்து, முகம், கை கால் என வெளியே தெரியக்கூடிய பகுதிகளில் அடிக்கடி தடவிவந்தால், பனிக்காலத்திலும் உங்கள் சருமம் வறண்டுபோகாமல் இருக்கும்.

அதேபோல, எண்ணெய் தடவாமலும், பாசிப்பருப்பு மாவை சருமத்தில் தேய்த்துக் குளிக்காதீர்கள். சருமம் இன்னும் உலர்ந்துவிடும். கடலை மாவு சருமத்தின் எண்ணெய்ப்பசையை உறிஞ்சிவிடும் என்பதால், அதைப் பயன்படுத்தாதீர்கள்.

Tags :