Advertisement

வறண்ட சருமம் பொலிவடைய எளிமையான டிப்ஸ்!

By: Monisha Wed, 23 Sept 2020 11:07:36 AM

வறண்ட சருமம் பொலிவடைய எளிமையான டிப்ஸ்!

வறண்ட சருமம் உள்ள பெண்களுக்கு எவ்வளவுதான் மேக் அப் போட்டாலும், தோல் வறட்சியுடன் இருப்பது, பொலிவு இழந்த தோற்றத்தைக் கொடுக்கும். இதை சரி செய்ய இந்த பதிவில் எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

முல்தானி மட்டி

முல்தானி மட்டி பொடியைப் பன்னீருடன் கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கழுவினால், சரும வறட்சி நீங்கும். இதனைத் தினசரி செய்யலாம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இதை முயலலாம்.

மஞ்சள்
மஞ்சள் தேய்த்துக் குளிப்பது ஒருபுறம் இருந்தாலும், தூய மஞ்சளை நன்கு அரைத்து, அதில் நீர் சேர்த்து பசை போல் ஆக்கி, முகத்தில் தடவி, அது உலர்ந்த பிறகு நன்கு கழுவ வேண்டும்.

வெண்ணெய்
வெண்ணெய்யை அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து, பின்பு நீரில் கழுவினால், வறண்ட சருமம் நீங்கும்.

அரிசி மாவு
அரிசி மாவுடன், வெள்ளரிச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து பின்பு கழுவினால், வறண்ட சருமத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

வாழைப்பழம்
நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை நன்கு அரைத்து, க்ரீம் போல மாற்றி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம் பொலிவடையும்.

Tags :