Advertisement

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!

By: Monisha Thu, 06 Aug 2020 3:57:54 PM

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்!

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் பெண்களில் சிலர் அழகாக காட்சியளிப்பர். அதைப் பார்த்து பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இளமையை தக்க வைத்துக் கொள்ள என்ன தான் சாப்பிடுகிறாரோ? என்று நினைப்பதும் உண்டு. அவ்வாறு ஏங்கும் பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது

பால்
காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர (தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை) சுருக்கங்கள் மறையும்.

potatoes,youth,women,beauty,milk ,உருளைக்கிழங்கு,இளமை,பெண்கள்,அழகு,பால்

ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர்- ஒரு தேக்கரண்டி, தேன்- ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேஸ்ட் ஒரு சிறந்த ஆன்டி- ஏஜிங்காக செயல்படுகிறது.

முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.

Tags :
|
|
|