Advertisement

இயற்கையாக அழகை மேம்படுத்த எளிய வழிமுறைகள்

By: Nagaraj Thu, 11 Aug 2022 3:14:20 PM

இயற்கையாக  அழகை மேம்படுத்த எளிய வழிமுறைகள்

சென்னை: ஆண், பெண் என பேதமின்றி சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். எளிமையான முறையில் இயற்கையாக அழகை மேம்படுத்த வழிமுறைகளை காண்போம்.
கற்றாழை: ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 15 கழித்து கழுவி வர சருமத்தை புற ஊதாக்கதிர்களை பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
எலுமிச்சை : எலுமிச்சை சாறுடன், சம அளவு தயிர் கலநது முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

aloe vera,lemon,nature,beauty,enhancement ,கற்றாழை, எலுமிச்சை, இயற்கை, அழகு, மேம்படுத்தல்

குப்பைமேனி :குப்பைமேனி இலை சாறு 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி, ரோஜா பன்னீர் அரை தேக்கரண்டி, கற்றாழை சாறு 1 தேக்கரண்டி தேன் கால் தேக்கரண்டி ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

முகத்தை கழுவி விட்டு பின்னர் இந்த கலவையை தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்த பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

Tags :
|
|
|