Advertisement

கூந்தல் கருகருவென வளர வேண்டுமா? உங்களுக்காக சில இயற்கை குறிப்புகள்!

By: Monisha Tue, 29 Sept 2020 12:01:21 PM

கூந்தல் கருகருவென வளர வேண்டுமா? உங்களுக்காக சில இயற்கை குறிப்புகள்!

கறிவேப்பிலையைத் துவையலாகவோ பொடியாகவோ உணவில் சேர்ப்பதன் மூலம், இரும்புச்சத்து உடலில் சேர்ந்து, முடியை வலுவாக்கும். எந்த உணவில் கறிவேப்பிலை இருந்தாலும், தூக்கி வீசாமல் சாப்பிடுவது நல்லது.

வாரத்துக்கு ஒரு முறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊறவைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாக்கி கண் சிமிட்ட வைத்திடும்.

நல்ல முற்றிய தேங்காயின் துருவல் ஒரு கப் எடுத்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். எண்ணெய் தனியாக பிரிந்து வரும். இது தான் கலப்படம் இல்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய். இதைத் தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால், முடி உதிர்வது நின்று, வளர்ச்சியும் துரிதப்படும்.

hair,curry leaves,coconut oil,hair loss,shampoo ,கூந்தல்,கறிவேப்பிலை,தேங்காய் எண்ணெய்,முடி உதிர்வு,ஷாம்பூ

100 மில்லி தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் ஒரு கப் மருதாணி இலையைப் போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். 2 நெல்லிக்காய், 2 பூந்திக் கொட்டையை அரைத்து, மருதாணி தண்ணீரில் கலந்து, வாரம் ஒரு முறை தலைக்கு 'பேக்' போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்த ஷாம்பூ அல்லது சீயக்காயினால் அலசுங்கள்.

வாரத்துக்கு இரண்டு முறை சின்ன வெங்காயம் இரண்டுடன், தேங்காய் துண்டு இரண்டு சேர்த்து அரைத்து வழுக்கையின் மீது பூசுங்கள். பிறகு, கடலை மாவைத் தேய்த்து அலசினால், மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கும்.

Tags :
|