Advertisement

நம் முகத்துக்கு புத்துணர்வு தரும் சில பொருட்கள்

By: vaithegi Mon, 06 Nov 2023 10:01:10 AM

நம் முகத்துக்கு புத்துணர்வு தரும் சில பொருட்கள்

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆரோக்கியம், மனநிம்மதி, அழகு இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதனால் வீட்டிலிருந்து வேலைசெய்யும்போதும் புத்துணர்வுடன் இருந்தால் மட்டுமே வேலையில் சோர்வும், வாழ்க்கையில் சலிப்பும் ஏற்படாமல் தப்பமுடியும்.

இதுநாள்வரை கூந்தலையும் சருமத்தையும் சரியாகப் பராமரிக்கத் தவறியவர்கள், அதன் பாதிப்புகளைச் சரிசெய்ய இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் உங்கள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் மனதில் புத்துணர்வும் பெருகும்.

பொதுவாக பூசணியின் தன்மை சருமத்தில் புதிய செல்களை உருவாக்கிட பெருமளவில் உதவுகிறது. இது முகத்தில் எண்ணெய் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது.

அடுத்து பசலைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கவும், முகத் தசைகளை வலுவடையச் செய்யவும் உதவுகிறது. மற்றும் இதன் நற்குணங்கள் சருமத்தில் இருக்கும் நச்சுகளை அழித்து சருமம் தெளிவடையவும், பொலிவடையவும் நன்கு பயனளிக்கிறது.

freshness,products,face,look bright ,புத்துணர்வு ,பொருட்கள்,முகம்,தோற்றம் பொலிவு


1.தினம் 1 ஆப்பிளை உட்கொள்வதன் மூலம் உங்களது சருமம் பொலிவடையும்.

2.மற்றும் ஆப்பிள் ஜூஸை முகத்தில் தடவி 1௦ நிமிடம் கழித்து முகம் கழுவினால் சருமம் புத்துணர்ச்சிப் பெறும்.

3.உடலில் எவ்வளவு அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதோ அவ்வளவு அளவு சருமம் பொலிவுப் பெறும். 4.பீட்ரூட்டில் உள்ள அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்களது சருமம் பொலிவடைய நன்கு உதவுகிறது. மற்றும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கவும் வெகுவாகப் பயனளிக்கிறது

5.பீட்ரூட். காரட் நமது அன்றாட உணவுக் கட்டுப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவாகும்.

6.இதில் உள்ள பீட்டா கரோட்டின் நமது உடலில் வைட்டமின் ஏ சத்து அதிகரிக்க உதவுகிறது.

7.இதனால் சருமம் நன்கு பொலிவடையும் மற்றும் கேரட் சருமம் சுருக்கமடையாமல் இருக்கவும் உதவுகிறது.

8.எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி உங்களது சருமத்தை கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் வடுக்களில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.

9.தக்காளியில் இருக்கும் லைகோஃபீன் எனும் உயர்ரக ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தை பருக்கள் வராமல் இருக்க உதவுகிறது.

10.இதை உணவில் அல்லது உணவுக்கு முன் சூப்பாக உட்கொள்வது நல்லது. இயற்கையாகவே தக்காளியை உட்கொள்வதன் மூலம் சருமம் பிரகாசிக்கிறது.

Tags :
|