Advertisement

முக அழகை பாதுகாக்கும் சில எளிய இயற்கை குறிப்புகள்!

By: Monisha Tue, 11 Aug 2020 12:08:25 PM

முக அழகை பாதுகாக்கும் சில எளிய இயற்கை குறிப்புகள்!

முக அழகை பாதுகாக்கும் சில எளிய இயற்கை குறிப்புகளை தெரிந்து கொள்வோம். வேப்பம் பட்டையை நன்றாக காயவைத்து தூள் செய்து அதில் தினமும் பல தேய்த்துவந்தால் பற்கள் பளபளப்பாக இருக்கும். அத்துடன் எத்தனை வயதானாலும் பற்கள் விழாது.

பச்சைப் பயிறை சலித்து எடுத்து கோதுமை தவிட்டை கலந்து குளித்தால் தோலில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.

முகம் பளபளப்பாக இருக்க, குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம் கழித்து முகத்தைக் கழுவி விடுங்கள். தினமும் இப்படிச் செய்தால் நாளாடைவில் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறிவிடும்.

beauty,face,natural,glow,dark circle ,அழகு,முகம்,இயற்கை,பளபளப்பு,கருவளையம்

மூக்கின் அருகில் கறுப்பு நிறம் இருந்தால் மோரில் நனைத்த பஞ்சால் அதன்மீது தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் கறுப்புத் திட்டு காணாமற் போய்விடும்.

சந்தனக் கல்லில் ஜாதிக்காய் அரைத்து இரவில் படுக்குமுன் கண்ணைச் சுற்றி போட்டு தூங்கினால் கருவளையம் மறையும். சந்தனம் மற்றும் ஜாதிக்காயில் உள்ள குளுமை கண்சோர்வு, அழற்சியினால் ஏற்படும் கருமையை மாற்றி கண்ணுக்கு புத்துணர்ச்சியைத் தரும். முகப் பருக்களுக்கும் இது சிறந்த நிவாரணியாகும்.

Tags :
|
|
|