Advertisement

சருமம் பொலிவாக மற்றும் அழகாக ஜொலிக்க சில எளிய குறிப்புகள்!

By: Monisha Fri, 11 Sept 2020 3:04:59 PM

சருமம் பொலிவாக மற்றும் அழகாக ஜொலிக்க சில எளிய குறிப்புகள்!

சருமம் பொலிவாக மற்றும் அழகாக ஜொலிக்க இந்த பதிவில் பல எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை உபயோகித்து அழகான சருமத்தை பெற்றிடுங்கள்!

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடையும். அடுத்ததாக,சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பளிச் என்று தோன்றும்.

முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும். புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம். ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக மாறும்.

women,face,beauty,milk,eggs ,பெண்கள்,முகம்,அழகு,பால்,முட்டை

பழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பளிச் என்று இருக்கும்.
ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.

கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

women,face,beauty,milk,eggs ,பெண்கள்,முகம்,அழகு,பால்,முட்டை

சிறிது சந்தனம் ,ஒரு சிறிய பாட்டில் பன்னீர் இரண்டையும் கலக்கி இரவு படுக்கும் முன்பு முகத்தில் தடவவேன்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கு மாற்றம் தெரியும்.

சோற்றுகற்றாழை இதன் உள்ள இருக்கும் கோதலை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு முதலில் முகத்தை நன்றாக கழுவி விட்டு கிண்ணத்தில் இருக்கும் அந்த கோதலுடன் கொன்சம் நீர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக ஒரு வாரத்தில் மாறிவிடும். உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.

Tags :
|
|
|
|