Advertisement

முகம் மென்மையாகவும் அழகாகவும் மாற சில குறிப்புகள்!

By: Monisha Fri, 18 Sept 2020 4:28:51 PM

முகம் மென்மையாகவும் அழகாகவும் மாற சில குறிப்புகள்!

நமது சமையல் அறையில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு முக அழகை அதிகரிக்க செய்யலாம். இந்த பதிவில் எளிய முறையில் முகம் மென்மையாகவும் அழகாகவும் மாற சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீர் விட்டு பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வருவதால் உங்களது முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

கற்றாழை
கற்றாழை ஜெல்லை கொண்டு முகத்தை தினமும் 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் எந்த ஒரு மாசு மருக்களும் இல்லாமல் முகம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.

face,tenderness,beauty,baking soda,banana ,முகம்,மென்மை,அழகு,பேக்கிங் சோடா,வாழைப்பழம்

மாம்பழ தோல்
மாம்பழ தோல் முகத்திற்கு மிகவும் நல்லது. இந்த மாம்பழ தோலை நன்றாக அரைத்து பால் சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளபளப்பாக மாறும். நிறம் கூடும்.

தேன்
தேனில் எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு தினமும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் முகம் மென்மையாகவும், கரும்புள்ளிகள் எதுவும் இல்லாமலும் பளபளப்பாகவும் மாறும். நிறம் கூடும்.

தண்ணீர்
தண்ணீர் தினமும் உடலுக்கு தேவையான அளவு குடிப்பதினால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி முகம் பொலிவாக இருக்கும்.

face,tenderness,beauty,baking soda,banana ,முகம்,மென்மை,அழகு,பேக்கிங் சோடா,வாழைப்பழம்

வாழைப்பழம்
வாழைப்பழத்தை நன்றாக மசித்து, அதில் பால் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். இது போன்று தினமும் இரண்டு தடவைகள் செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும். இரண்டு வாரங்களில் முகத்தில் பொலிவு கூடியிருப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீரை கொண்டு தினமும் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகம் பளபளப்பாக மாறும். முகத்தின் நிறம் கூடும்.

பால்
பாலை கொண்டு தினமும் காலையில் முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை, அழுக்கள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும். முகத்தின் வசீகரம் கூடும். இளமையான தோற்றம் கிடைக்கும்.

Tags :
|
|