Advertisement

இரவு கண்டிப்பாக மேக்கப்பை அகற்றி விட்டு தூங்குங்கள்!

By: Monisha Tue, 22 Sept 2020 4:50:00 PM

இரவு கண்டிப்பாக மேக்கப்பை அகற்றி விட்டு தூங்குங்கள்!

தூங்கச் செல்வதற்கு முன்பு, மேக்கப்பை அகற்றுவதற்கு சோம்பலை வெளிப்படுத்தும் ஆளா நீங்கள்? உங்கள் செயலை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது! வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள், பருக்கள் போன்ற ஏராளமான சரும பிரச்சினைகளை நீங்களே வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம். நாம் தூங்கும்போது, நம்முடைய உடல் இயல்பாகவே சருமத்தில் உள்ள துளைகள் வழியாக கழிவுகளை வெளியேற்றும்.

இரவில் மேக்கப்பை அகற்றாமல் விட்டால், உங்கள் சருமத் துளைகள் அடைக்கப்படும். இதனால் இயல்பான கழிவு அகற்றும் செயல்முறை தடுக்கப்படும். மேலும், மேக்கப் இயல்பாகவே சருமத்தை உலர வைக்கும். இரவில் மேக்கப்பை அகற்றாமல் விட்டால், சருமம் வறண்டு, எரிச்சலடையக் கூடும். எனவே, மேக்கப்பை அகற்ற மறந்தால், அது இந்த புதுப்பிப்பு செயல்பாட்டையும் முடக்கும். சருமத்தைப் பராமரிக்கும் உங்கள் போராட்டத்தில் பாதி, இங்கேயே முடிந்துவிடும். எனவே, கண்டிப்பாக அடுத்த முறை மேக்கப்பை அகற்றி விட்டு படுத்து தூங்குங்கள்.

பெரும்பாலான மேக்கப் ரிமூவர்களில் எண்ணெய், நீர் அடிப்படையிலான கரைசல்கள் இரண்டு லேயர்களாக இருப்பதை காணலாம். அவை கண், லிப் மேக்கப் ரிமூவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. அவற்றை முகம் முழுவதும் பயன்படுத்தினாலும் நல்லதுதான்.

makeup,skin,oil,water,dead cells ,மேக்கப்,சருமம்,எண்ணெய்,நீர்,இறந்த செல்கள்

மேக்கப்பை எடுக்க இது போதும். பாட்டிலைக் குலுக்கி, ஒரு பஞ்சில் அந்தக் கலவையை நனைக்கவும். நனைக்கப்பட்ட பஞ்சை இரண்டு, மூன்று நொடிகள் சருமத்தின் மேல் அழுத்தி வைத்து, பின்னர் துடைத்து எடுக்கவும்; ஆனால் பஞ்சினால் சருமத்தை அழுத்தி, சுரண்டி துடைக்கக் கூடாது. கண்களைச் சுற்றி அழுத்தமான மேக்கப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஏற்றது.

மேக்கப் ரிமூவர் வைப்கள்: பேட், டிஷ்யு பேப்பர் வடிவத்தில் இவை இருக்கலாம். பாட்டில்களை குலுக்குவது, பஞ்சில் நனைப்பது போன்ற வேலைகளை மேக்கப் ரிமூவர் வைப்கள் தவிர்க்கும். ஒரு பேட் அல்லது டிஷ்யுவால் மேக்கப்பை துடையுங்கள்.

கிளென்சிங் மில்க்: வறண்ட சருமத்துக்கு இது ரொம்பவும் ஏற்றது. எல்லா வகையான மேக்கப்பையும் இது அகற்றும். லோஷன் போன்ற கிளென்சரை மசாஜ் செய்து, பின்னர் சுத்தமான டிஷ்யுவால் துடைக்கவும்.

Tags :
|
|
|
|