Advertisement

இளநரை வருவதற்கான காரணம்... அதற்காக தீர்வு

By: Nagaraj Tue, 13 Dec 2022 10:37:22 PM

இளநரை வருவதற்கான காரணம்... அதற்காக தீர்வு

சென்னை: முதுமை பருவ அழகின் அடையாளமான நரை, தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் இளம் பருவத்தினருக்கு இளநரை வருவது சாதாரணமாகி விட்டது.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாசு,அசுத்தமான காற்று, மன அழுத்தம், அதிக டென்சன், முறையற்ற தூக்கம், பரம்பரை, ரத்த சோகை, ஹார்மோன் கோளாறுகள், போன்றவற்றால் இளநரை வருவது அதிகரித்து வருகிறது.

இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டால் ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை ஏற்பட்டு , மனதில் மகிழ்ச்சியற்ற நிலை உருவாகிறது. இளநரை தோன்றுவதற்கான காரணங்களை முதலில் தெரிந்து கொண்டால், இளநரை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறியலாம்.

food habits,environmental pollution,polluted air,stress ,உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாசு,அசுத்தமான காற்று, மன அழுத்தம்

அனைத்துத் தாதுப்பொருள்களும் அடங்கிய ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது இளநரைக்கு முக்கியமான காரணம். இதனால் , தலைமுடிக்கு போதிய ஊட்ட சத்துக்கள் கிடைக்காமல் இளநரை, முடி உதிர்வு ,தலைமுடி வளர்ச்சி குறைவு போன்றவை ஏற்படலாம்.

ஏனெனில் தவறான உணவுப்பழக்கங்கள், உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது. சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும் அல்லது நரை ஏற்படும். இரும்புச் சத்து, புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள இளநரை தடுக்கப்படும்.

தலைக்கு சிகைக்காயும் வெந்தயம், அரப்பும் தேசிக்காயும், பாசிப்பயறு மா, செம்பருத்தி இலை, முட்டை போன்ற இயற்கை பொருட்களை பாவித்து வரலாம். இடையிடையே வீரியம் குறைந்த ஷாம்பூகளை (Mild Shampoo) பயன்படுத்தலாம்.

Tags :