Advertisement

நகங்களை முறையாக பராமரியுங்கள்... உடல் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்

By: Nagaraj Sun, 10 May 2020 7:35:04 PM

நகங்களை முறையாக பராமரியுங்கள்... உடல் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்

நகங்களை முறையாக பராமரிப்பது மிகவும் முக்கியம். கையின் அழகு நகங்களில் தான் உள்ளது. மேலும் நம் உடலின் ஆரோக்கியத்தை காட்டுவதும் நகங்கள்தான். அதை சிறப்பான முறையில் பராமரிப்பது குறித்து சில ஆலோசனை.

* நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.


* உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம். இதனால் கால் நகங்கள் வலுப்பெறும். உடையாது. கை நகங்கள் மட்டுமின்றி கால் நகங்களையும் முறையாக பராமரிப்பதும் முக்கியம்.

nails,nutrition,iron,calcium,vegetables ,நகங்கள், ஊட்டச்சத்து, இரும்பு, கால்சியம், காய்கறிகள்

நகங்களை முறையாக பராமரிக்க

* நகங்கள் மட்டுமின்றி கைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும். சிலருக்கு உள்ளங்கை கடினமாக இருக்கும். இதற்கு ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும்.

nails,nutrition,iron,calcium,vegetables ,நகங்கள், ஊட்டச்சத்து, இரும்பு, கால்சியம், காய்கறிகள்

பெண்கள் தங்களின் நகத்தை பராமரிப்பதில் பல நேரங்களில் அலட்சியம் காட்டுகின்றனர். அப்படி இல்லாமல் வாரம் ஒரு முறை முறையாக நகத்தை பராமரிப்பது மிகவும் நல்லது.

* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

Tags :
|
|