Advertisement

வயதான தோற்றத்தை தரும் கைகளின் சுருக்கத்தை போக்க இயற்கை வழி!

By: Monisha Tue, 15 Dec 2020 11:32:19 AM

வயதான தோற்றத்தை தரும் கைகளின் சுருக்கத்தை போக்க இயற்கை வழி!

இளம் வயதினர் பலருக்கு கைகளில் சுருக்கம் அதிகமாக காணப்படும். இது வயதான தோற்றத்தைக் கொடுக்கும். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் கைகளுக்கு போதிய பராமரிப்பு கொடுக்காதது தான். இந்த பதிவில் கைகளில் சுருக்கங்கள் வராமல் தடுக்கவும், ஏற்கனவே இருக்கும் சுருக்கங்களை போக்கவும் என்னென்ன செய்வது என்று பார்க்கலாம்.

கைகளில் ஈரப்பசை குறைவாக இருந்தால், அவை சுருக்கங்களை ஏற்படுத்தும். எனவே தினமும் தவறாமல் கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் தடவி வாருங்கள். மேலும், வெளியே வெயிலில் செல்லும் போது, மறக்காமல் சன்ஸ்க்ரீன் தடவிச் செல்லுங்கள். இதனால் கைகளில் சூரியக்கதிர்களின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் சரும சுருக்கம் ஏற்படாது. ஏனெனில் அவர்களின் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கும். ஆகவே இரவில் படுக்கும் போது, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவில் படுக்கும் போது கை மற்றும் கால்களுக்கு தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால், சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

wrinkle,hands,natural,beauty,skin ,சுருக்கம்,கைகள்,இயற்கை,அழகு,சருமம்

தினமும் கைகளுக்கு நன்கு உடற்பயிற்சி செய்து வந்தால், அவை கைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

பாதி எலுமிச்சை சாறு எடுத்து, அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, கைகளில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் உலர வைத்து, பின குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், கைகளில் உள்ள அழுக்குகள், கருமை மற்றும் சுருக்கங்கள் மறையும்.

தினமும் தக்காளி சாற்றினை கைகளில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவி வர வேண்டும் இதுவும் கைகளில் இருக்கும் சுருக்கத்தை போக்கும்.

Tags :
|
|