Advertisement

தலைமுடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க எளிமையான வழி

By: Nagaraj Fri, 30 Oct 2020 2:25:27 PM

தலைமுடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க எளிமையான வழி

தலைமுடி உதிர்வுக்கு முட்டை மிகச் சிறந்த தீர்வாக உள்ளது, முட்டையில் உள்ள அதிக அளவு புரதமானது முடி வளர்ச்சியினைத் தூண்டச் செய்கின்றது. முட்டையினை உட்கொண்டாலும் சரி, தலைமுடியில் அப்ளை செய்தாலும் சரி முடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

தேவையானவை:


முட்டை- 2
தேங்காய் – அரை மூடி

hair growth,eggs,coconut milk,vitamins ,கூந்தல் வளர்ச்சி, முட்டை, தேங்காய்பால், வைட்டமின்கள்

செய்முறை: தேங்காயினை உடைத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுத்து அதனை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து பால் பிழிந்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் முட்டையினை உடைத்து ஊற்றி நுரை வரும்வரை அரைக்கவும். இந்த முட்டை ஹேர்பேக்கினை தலைமுழுவதும் தடவி 30 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் முடியை அலசவும். இந்த ஹேர்பேக்கினை வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் செய்யவும். முட்டை மற்றும் தேங்காய்பாலில் உள்ள வைட்டமின்கள் முடி உதிர்வை தடுக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Tags :
|