Advertisement

பருக்கள், கரும்புள்ளிகளை நீக்க எளிய வழிமுறை

By: Nagaraj Wed, 08 June 2022 8:46:07 PM

பருக்கள், கரும்புள்ளிகளை நீக்க எளிய வழிமுறை

சென்னை: கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால் முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம்அழகாகவும் வெள்ளையாக மாறுவதை காணலாம்.

கசகசாவை பாலில் சேர்த்து 15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். பின் அதை மிக்சியில்சேர்த்து மைய அரைத்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் அழகான தோற்றத்தை பெறுவதுடன் கரும்புள்ளிகள் மறைந்துமுகம் பளிச்சிடும். இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள்காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

சிலரது முகம் எப்போதும் எண்ணெய் வடிந்தது போல் பொலிவு இல்லாமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கிஅதனை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

fruit juices,face,cosmetics,health,lemon juice,yogurt ,பழச்சாறுகள், முகம், அழகுபெறும், ஆரோக்கியம், எலுமிச்சை சாறு, தயிர்

அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியானஎண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.

தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். சருமத்தின் மின்னுப்பை கொடுப்பதற்கு ஊட்டச்சத்து வேண்டுமே. அதை எளிதாக பெறுவதற்கு உதவுவது பழச்சாறுகள் தான். எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் தேநீர் போன்ற பானங்களை தவிர்த்து பழச்சாறுகளுக்கு மாறுங்கள்.
உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுவதால் சருமம் இயற்கையாகவே மினுமினுப்பை கொள்ளும். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

Tags :
|
|