Advertisement

முகச்சுருக்கம், வறண்ட தோல் பிரச்னைகளுக்கு தீர்வு

By: Nagaraj Mon, 07 Sept 2020 5:07:21 PM

முகச்சுருக்கம், வறண்ட தோல் பிரச்னைகளுக்கு தீர்வு

முகச்சுருக்கம், வறண்ட தோல் பிரச்னைகளுக்கு தீர்வு... பல பெண்களுக்கு வரும் பிரச்சனைகளில் ஒன்று முகச்சுருக்கம். இளமை தோற்றத்தை கெடுத்து முதுமை உணர்வை கொடுக்கும் இந்த முகச்சுருக்கம் வறண்ட தோல், எண்ணெய் உணவுகள், பாஸ்ட்புட் உணவுகள், அதிகப்படியான கவலை போன்றவற்றால் ஏற்ப்படுகிறது. இதனை போக்க உங்களுக்காக சில வழிமுறை.

காய்ச்சி ஆற வைத்த பாலை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து நான்கு துளி எலுமிச்சை சாறு கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் பூசவும். காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் சோப் போடாமல் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வர சுருக்கம் நீங்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும். 20 நிமிடத்திற்குப் பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை நனைந்து துடைக்க வேண்டும்.

பப்பாளி பழத்தை நன்கு கூழாக்கி முகத்தில் தேய்க்கலாம். அல்லது பழத்தை சாப்பிட்டு அதன் தோலின் உட்பகுதியை முகத்தில் தேய்க்கலாம். இரவில் பாதம் எண்ணையை முகத்தில் தடவி விட்டு காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம்.

wrinkles,bananas,gooseberries,carrots ,முகச்சுருக்கம், வாழைத்தண்டு, நெல்லிக்காய், கேரட்

வைட்டமின் ஈ மாத்திரைகளை உடைத்து அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து உடலில் தேய்த்து ஊறவைத்து கடலை மாவு தேய்த்து குளிக்கலாம். வாரம் இருமுறை கேரட், ஆரஞ்சு ஜூஸ் குடித்து வர சருமம் ஆரோக்கியமடையும். தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை மட்டும் மனத்தில் வைத்து கவலையின்றி வாழுங்கள்.

Tags :