Advertisement

உதடு, கன்னத்தில் கருமையா? அதனால் வேதனையா? இதோ உங்களுக்கான தீர்வு

By: Nagaraj Fri, 08 May 2020 2:18:03 PM

உதடு, கன்னத்தில் கருமையா? அதனால் வேதனையா? இதோ உங்களுக்கான தீர்வு

உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமம் உங்கள் முக சரும நிறத்தை சமமாக காட்டாது.இது உங்கள் முக அழகையே கெடுத்து விடும். இந்த பிரச்சினை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கின்றன.

இந்த பிரச்சினை ஏற்படக் காரணம், அதிகமான நிறமிகள் (ஹைபர் பிக்மன்டேஷன்), அழுக்குகள், நச்சுப் பொருட்கள், த்ரட்டனிங், வேக்சிங் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

எனவே இந்த பிரச்சினையால் நிறைய பேர் தங்களது முக சருமத்தால் கவலைப்படுகின்றனர். இதை மறைக்க கண்சீலர் போன்ற மேக்கப் பொருட்களை அவர்கள் நாடுகின்றனர். ஆனால் இந்த அழகு பொருட்கள் தற்காலிகமாக கருமையை மறைக்க மட்டுமே பயன்படுகின்றன.நிரந்தர ஒரு பயனை பெற வேண்டும் என்றால் அதற்கு நாம் இயற்கை பொருட்கள் மூலம் தீர்வு காண்பதே சிறப்பு.

sandalwood powder,skin,good complexion,cheek,lip,dark ,சந்தன பொடி, சருமம், நல்ல நிறம், கன்னம், உதடு, கருமை

உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. எனவே இந்த உருளைக்கிழங்கு நமது உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை எளிதாக நீக்கி விடுகிறது.

வேக வைக்காத உருளைக்கிழங்கை எடுத்து அதை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இப்பொழுது பாதிக்கப்பட்ட சரும பகுதியில் இந்த துண்டுகளை கொண்டு தேய்க்கவும். 15- 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு குளிர்ந்த மற்றும் சூடான நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

உங்கள் உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை நீக்க லெமன் ஜூஸ் பயன்படுகிறது. ஏனெனில் இதில் ஏராளமான சிட்ரிக் அமிலம் உள்ளது.

sandalwood powder,skin,good complexion,cheek,lip,dark ,சந்தன பொடி, சருமம், நல்ல நிறம், கன்னம், உதடு, கருமை

பயன்படுத்தும் முறை

2 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது இந்த கலவையை ஒரு பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த மற்றும் சூடான நீரில் கழுவவும்.வாரத்திற்கு 4-5 முறை என்று பயன்படுத்தி வந்தால் கருமை நீங்கும்.

கற்றாழை ஜெல் ஒரு சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும் பொருளாகும். கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த மற்றும் சூடான நீரில் கழுவவும். இந்த முறையை ஒரு நாளைக்கு பல முறை என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் சரும கருமை நீங்குவதோடு சருமம் மிருதுவாகவும் மாறும்.

சந்தன பொடி சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்க கூடியது. எனவே உங்கள் உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை இது எளிதாக போக்கிடும்.

Tags :
|
|
|