Advertisement

தேமலை போக்க இயற்கை வழிமுறைகள் இருக்கே... இதோ சில டிப்ஸ்

By: Nagaraj Mon, 19 Dec 2022 11:33:22 PM

தேமலை போக்க இயற்கை வழிமுறைகள் இருக்கே... இதோ சில டிப்ஸ்

சென்னை: உடலுக்கு சோப்பு தவிர கடலை மாவு, பாசிப்பருப்பு, மஞ்சள் போன்ற இயற்கை மருத்துவ பொருட்களையும் நாம் வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தேமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி பார்ப்போம்.

பூவரச மரத்தின் காய்களை பறித்து அம்மியில் வைத்து அரைத்து அதன் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் அகலும். அருகம்புல் உடல்நலத்திற்கும், ரத்தத்தை சுத்தம் செய்யவும் முக்கியமானது. இதனை அரைத்து தேமல் உள்ள இடத்தில் பயன்படுத்தலாம்

black cumin,oil,milk,ghee nelli,coriander leaves,themal ,கருஞ்சீரகம், எண்ணெய், பால், கீழா நெல்லி, கொத்தமல்லை தழை, தேமல்

நாயுருவி இலையை அரைத்து அதன் சாறை தடவி வந்தால் தேமல், படை போன்றவை குணமாகும். கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி அதனை பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து வந்தால் தேமல் குணமடையும். எலுமிச்சை தோலை உலர்த்தி அதனை தூளாக்கி படிகாரம் கலந்து குழைத்து பூசி வந்தால் தேமல் குணமடையும்.

மஞ்சளை இடித்து நல்லெண்ணெயில் போட்டு தேமல் உள்ள இடத்தில் பூச வேண்டும். சுக்குடன் சிறிது துளசி இலையை வைத்து மையாக அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வரும்பொழுது தேமல் குணமடையும்.

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து முகத்தில் தடவ கரும்புள்ளி, தேமல் போன்றவை குணமாகும். கருஞ்சீரகத்தை எண்ணெய் விட்டு வறுத்து அதனை அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசலாம்.

Tags :
|
|