Advertisement

கால்கள் மிருதுவாக இந்த வழிமுறைகள் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்

By: Nagaraj Mon, 19 June 2023 7:45:27 PM

கால்கள் மிருதுவாக இந்த வழிமுறைகள் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்

சென்னை: கால்கள் மிருதுவாக இருக்க இதை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இதைச் செய்து பாருங்கள்.

ஒரு அகலமான பிளாஸ்டிக் டப்பில், முழங்கால் மூழ்கும் அளவுக்கு வெந்நீர் நிரப்பி, அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 1 டீஸ்பூன் பாதாம் ஆயில் போட்டு, இரண்டு பாதங்களையும் வைத்துக் கொள்ளவும். கால்களுக்கு நல்ல ஓய்வு கிடைப்பதோடு, இறந்த சரும செல்கள் உதிர்ந்து, பாதங்களில் இயற்கையான ஈரப்பதம் உருவாகும்.

நகங்கள் உடைந்து, வெடிப்பும் கீறலுமாக இருந்தால் வாரம் ஒருமுறை செய்ய வேண்டியது:

அரை கப் காய்ச்சி ஆறிய பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டுக் குழைத்து, காட்டன் பட்ஸில் தோய்த்து, கால் விரல்களின் நகங்களின் மீது பூசி வரவும். ரோஜா இதழ் போன்ற அழகு விரல்கள் அமைவது கேரண்டி! நகங்களை சதுர வடிவிலும், ஓரங்களை வட்ட வடிவிலும் வெட்டுவதுதான் சரியான முறை. மண் புகுந்து கொள்ளாது.

pitta eruption,padam,crispy,poppy,white sesame,neem oil ,பித்த வெடிப்பு, பாதம், மிருது, கசகசா, வெள்ளை எள்ளு, நல்லெண்ணெய்

பாத அழகுக்கு ஹோம்-மேட் க்ரீம் செய்யும் விதம்: வால்நட்டைப் பொடியாக்கி அதில் அரை டீஸ்பூன் வெண்ணெய் கலந்து குழைத்து, பாதத்தில் பூசி வர, பாதங்கள் மிகவும் அழகாகவும் மிருதுவாகவும் மாறிவிடும்.

வெயில்பட்டு கால் மட்டும் கறுத்துப் போய் உள்ளதா. இதற்கு உருளைக்கிழங்கு போதும்.

உருளைக்கிழங்கு ஜூஸ் 1/2 கப் + எலுமிச்சைச் சாறு- 1/4 கப் + காய்ச்சி ஆறிய பால் 1/4 கப் + 3 டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து கால்களில் பூசி, இருபது நிமிடம் கழித்துப் பாருங்கள். பொன் போன்ற பாதங்கள் டாலடிக்கும்!

பித்தவெடிப்புத் தொல்லைக்கு இதை செய்து பாருங்கள்.ஐம்பது கிராம் வெள்ளை எள்ளு + ஐம்பது கிராம் கசகசாவை மிக்ஸியிலிட்டு நைஸாகத் தூள் பண்ணவும். அந்தப் பொடியுடன் இருநூறு மில்லி நல்லெண்ணெய் கலந்து, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். காலையும், மாலையும் தடவி வர, பித்தவெடிப்பு ‘டாடா பை பை’ சொல்லிவிடும்.

Tags :
|
|
|