Advertisement

  • வீடு
  • அழகு குறிப்புகள்
  • விலை உயர்ந்த பாரம்பரியமிக்க பட்டுப்புடவைகள் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!!!

விலை உயர்ந்த பாரம்பரியமிக்க பட்டுப்புடவைகள் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!!!

By: Nagaraj Fri, 20 Oct 2023 2:42:13 PM

விலை உயர்ந்த பாரம்பரியமிக்க பட்டுப்புடவைகள் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!!!

சென்னை: பட்டுப்புடவை எல்லா பெண்களுக்கும் பிடித்தமான பாரம்பரிய உடை. பாரம்பரியத்தை விரும்பும் அனைத்து பெண்களும் பட்டுப் புடவையை கட்டாயம் விரும்புவார்கள். ஆனால் இந்த பட்டுப் புடவையின் விலை சற்று அதிகம். ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதனால் தரமான பட்டுப் புடவையை நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். திருமண காரியங்களுக்கு பட்டுப் புடவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. திருமண வீடுகளில் பட்டுப் புடவை இன்றி திருமணம் நடைபெறாது.

silk,focus,price,mulberry type,quality,sales ,பட்டுப்புடவை, கவனம், விலை, மல்பெர்ரி வகை, தரம், விற்பனை

பார்ப்பதற்கு ஒரே மாதிரியான பட்டுப் புடவையின் விலை, கடைக்குக் கடை வேறுபடும். அதனால், பட்டின் தரம் குறித்து எப்போதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். நகையில் கலந்திருக்கும் தங்கத்தைப் போலவே, பட்டுப் புடவையின் தரத்தைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் குழப்பங்கள் ஏற்படும். ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பட்டுபோல ஜொலிக்கிறது என்பார்கள். ஆனால், பளபளப்பது எல்லாம் நல்ல பட்டுப் புடவை அல்ல. அதனால், வெறும் பளபளப்பை மட்டுமே கருத்தில்கொண்டு புடவையை தேர்ந்தெடுக்க முடிவு செய்யக்கூடாது. பட்டு நூலின் விலை, தயார் செய்வதற்கான கூலி உட்பட செலவுகள் அதிகம். அதனால், ரொம்பவும் மலிவான விலையில் பட்டுப் புடவைகள் தருவதாகச் சொன்னால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிலர், டிசைனை வைத்து பட்டுப் புடவைக்கு பெயர்கள் வைத்திருப்பார்கள். ஆனால், என்ன பெயர் வைத்தாலும் பட்டு நூல் தரம் ஒன்றுதான். அதனால், பெயரை மட்டும் வைத்து, பட்டின் தரத்தை முடிவு செய்யக்கூடாது. பட்டு என்பது நான்கு வகைகள்தான். மல்பெர்ரி வகைகளே நம் பகுதியில் அதிகம் கிடைக்கக்கூடியது.

Tags :
|
|
|