Advertisement

முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!

By: Monisha Thu, 09 July 2020 4:16:03 PM

முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!

ஒருவருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிந்தால் அதற்கு பல காரணிகளை கூறலாம். முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், ஹார்மோன்களின் மாற்றம், அதிகமான எண்ணெய் உணவுகள், சுற்றுசூழல் காரணத்தால், அதிக மன அழுத்தம் இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதன் தாக்கத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிட செய்யும். இதுதான், முகத்தில் எண்ணெய் வடிய காரணம்.

உணவில் அதிகமாக பால் சார்ந்த பொருட்களை சேர்த்து கொண்டால் அது முகத்தில் எண்ணெய் பசையை ஏற்படுத்தும். நிறையுறாத கொழுப்புகளை அதிகம் கொண்ட வெண்ணெய், நெய், பாலாடை கட்டி போன்றவை முகத்தில் எண்ணெய்யை அதிகம் சுரக்க செய்யும். அத்துடன் பாதம் பால் மற்றும் சோயா பால் ஆகியவற்றையும் அதிகம் குடிப்பதால் இது எண்ணெய் வடியும் முகமாக மாற்றும்.

உணவில் சுத்தம் மிக முக்கியமானதுதான். ஆனால், அதற்காக உணவை முற்றிலுமாக சுத்தம் செய்வதென்பது அவற்றில் உள்ள சத்துக்களை உறிஞ்சி எடுப்பதற்கு சமமாகும். மேலும் அதில் சுத்திகரிக்க, பல வித வேதி பொருட்களும் பயன்படுத்துவதால் அவற்றின் தன்மை மாறி விடுகிறது. பிரட், கேக், பிஸ்கட்ஸ், மிட்டாய்கள் ஆகியவை எண்ணற்ற தீங்கை உடலுக்கு தர கூடும். அதாவது சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் சருமத்தை பாதித்து முகப்பரு, எண்ணெய் வடிதல், அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும்.

face,oily skin,fat,snacks,alcohol ,முகம்,எண்ணெய் பசை,கொழுப்பு,தின்பண்டங்கள்,மது

நம்மில் பலருக்கு சாயங்காலம் வேளையில் ஏதாவது வறுத்த அல்லது பொறித்த உணவை கோரிக்க வேண்டும் என்பது பழக்கமாகவே மாறி விட்டது. சமோசா, பஜ்ஜி, வடை, பகோடா போன்றவற்றை பெரிதும் நாம் விரும்பி உண்ணுவோம். இதுதான் உங்கள் முகத்தில் எண்ணெய் வடிய முதன்மையான காரணமாகும். அத்துடன் இவை உங்கள் சரும ஆரோக்கியத்தையும் சேர்த்தே கெடுக்கும்.

அதிகமாக சர்க்கரை உள்ள தின்பண்டங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு முக அழகையும் சேர்த்தே கெடுகிறது. உதாரணத்திற்கு இனிப்பு வகைகள், மிட்டாய்கள், ஐஸ் கிரீம்கள் போன்ற உணவு பொருட்கள் உடலில் எண்ணெய் சுரப்பிகளை அதிகமாக சுரக்க செய்கின்றது. இதுதான் முகத்தின் அழகிற்கு தீங்கை ஏற்படுத்துகிறது.

உணவுகளில் அதிகமாக கெடுதல் தர கூடியது பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான். பொதுவாக ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கால அளவு இருக்கும். அந்த கால அளவை தாண்டி அவற்றை உண்டால், உடலுக்கு நன்மையை அது தராது. பதப்படுத்தப்பட்ட மீன்கள், இறைச்சி, தின்பண்டங்கள் போன்ற அனைத்துமே சரும ஆரோக்கியத்தை கெடுக்கும்.

face,oily skin,fat,snacks,alcohol ,முகம்,எண்ணெய் பசை,கொழுப்பு,தின்பண்டங்கள்,மது

வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் மற்றும் சில சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ்(glycemic index) அளவை கொண்டது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிட செய்யும். உடலில் இதன் அளவு அதிகமானால் எண்ணெய் உற்பத்தியை பெருக்கும். இஃது முகத்தின் எண்ணெய் வடிதலுக்கு வழி செய்யும்.

மது அருந்துவதால் உங்கள் தோலை டீஹைடிரேட் செய்து வியர்வை வடிதல், எண்ணெய் பசையை உருவாக்குதல் போன்றவை நிகழும். குறிப்பாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை உருவாகும். அத்துடன் முகத்தில் உள்ள துவாரங்களை திறக்க செய்து சுரப்பிகளை நன்கு இது சுரக்க செய்யும். இது எண்ணெய் வடிதலை ஏற்படுத்தும்.

மேற்கண்ட எந்த உணவு வகைகளையும் உங்கள் உணவில் அதிகம் எடுத்து கொள்ள வேண்டாம். இதனை மீறினால் அது உங்கள் முக அழகை கெடுத்து விடும். அதிகமான பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை உங்கள் உணவில் நிறைய எடுத்து கொள்ளுங்கள். இது முக ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும்.

Tags :
|
|
|